For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"மெஸ்ஸியும், நெய்மாரும்" மோதிய மயிர்க்கூச்செறியும் "மட் புட்பால்"..!

Recommended Video

சேற்றில் அசத்தும் கேரளத்து சேட்டன்கள்- வீடியோ

மலப்புரம், கேரளா: விளையாட்டிலும் கூட மற்றவர்களை விட கேரளத்தினரின் ரசனை சற்றே வித்தியாசமானதுதான். எல்லோரும் விதம் விதமாக கிரிக்கெட் ஆடி வந்தால் கேரளத்தினர் மட்டும் வித்தியாசமான முறைகளில் கால்பந்தில் கலக்குவார்கள்.

இந்தியாவில் கால்பந்துக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள வெகு சில மாநிலங்களில் ஒன்று கேரளா. இங்குள்ள மலப்புரம் மாவட்டத்தில் வருடா வருடம் ஒரு கால்பந்து தொடர் நடைபெறுகிறது. அது சேற்றில் ஆடும் மட் புட்பால் ஆகும்.

மழைக்காலத்தில்தான் இது நடத்தப்படுகிறது. அதாவது ஜூன் மாதத்தில். முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தனர். ஆனால் இன்று அது பேசப்படும் முக்கியத் தொடராக மாறி நிற்கிறது. "எடோ, மலப்புரம் மட் புட்பால் கண்டோ" என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரபலமாகி விட்டது.

 2015ம் ஆண்டு முதல்

2015ம் ஆண்டு முதல்

2015ம் ஆண்டு இந்த மட் புட்பால் தொடர் முதல் முறையாக விளையாடப்பட்டது. முதல் தொடரிலேயே இது ஹிட்டானது. இளைஞர்கள் சகதியில் கால்பந்து ஆடுகின்றனர் என்று பரவிய தகவலைக் கேட்டு அக்கம்பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் கூடி விட்டனர். இதனால் முதல் போட்டியே பிரபலமாகி விட்டது.

 சுற்றுலாத்துறை ஏற்பாடு

சுற்றுலாத்துறை ஏற்பாடு

உண்மையில் இந்த கால்பந்துப் போட்டிக்கான விதையைப் போட்டது மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கவுன்சிலாகும். அதன் ஆலோசனையின் பேரிலேயே இந்தப் போட்டி நடத்தப்பட்டது. அவர்கள் திட்டமிட்டபடி இது பெரும் பிரபலமானது.

 சேறு நிறைந்த வயல் வெளியில்

சேறு நிறைந்த வயல் வெளியில்

கேரளாவில் மலப்புரத்தில்தான் அதிக அளவிலான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். மழைக்காலங்களில் சேறு நிறைந்த வயல் வெளிகளில் மலப்புரத்தைச் சுற்றிலும் உள்ளவர்கள் கால்பந்து விளையாடுவது சகஜம். இதை வைத்துத்தான் இந்தத் தொடர் அறிமுகமானது.

 ஸ்பெஷல் மைதானம்

ஸ்பெஷல் மைதானம்

தற்போது கோடூரில் உள்ள விசேஷ மைதானத்தில் இந்த மட் புட்பால் வருடா வருடம் நடந்து வருகிறது. இதற்கென 30க்கு20 மீட்டர் பரப்பளவில் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கோல் போஸ்ட்டுகள் 2 மீட்டர் உயரத்திலும், 4 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகின்றன.

 12 அணிகள்

12 அணிகள்

மலப்புரம் மற்றும் சுற்றியுள்ள வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் போட்டியில் மோதுகின்றன. ஒவ்வொரு போட்டியும் தலா 20 நிமிடம்தான் நடைபெறும். காரணம், சேற்றில் விளையாடுவது மிகக் கடினம் என்பதால்.

 கூடுதல் விசேஷம்

கூடுதல் விசேஷம்

இந்த ஆண்டு கூடுதல் விசேஷத்துடன் மட் புட்பால் போட்டி நடைபெற்றது. காரணம், உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் நடந்து வருவதால். மெஸ்ஸி என்றும் ரொனால்டோ என்றும், நெய்மார் என்றும் செல்லப் பெயர் சூட்டி கேரளத்து இளைஞர்கள் சேற்றில் இறங்கி சீறி விளையாடியது நிச்சயம் வித்தியாசமான அனுபவம்தான்.

 பிரேசில் ரசிகர்கள் தோல்வி

பிரேசில் ரசிகர்கள் தோல்வி

நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினா ரசிகர்களும், பிரேசில் ரசிகர்களும் மோதினர். மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் அர்ஜென்டினா ரசிகர்கள் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினர்.

Story first published: Tuesday, June 26, 2018, 10:18 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
The famous Mud football match was held in Kerala's Malappuram. Argentina fans beat Brazil fans by 2 -1 in the match held Yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+