For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துண்டு ஒருமுறை தான் தவறும்.... மேஜிக் காட்ட மெஸ்ஸி தயார்.... குரேஷியாவுடன் மோதுகிறது அர்ஜென்டினா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குரேஷியாவை சந்திக்கிறது அர்ஜென்டினா.

Recommended Video

குரேஷியாவுடன் மோதுகிறது அர்ஜென்டினா!
Argentina to meet croatia in the fifa world cup

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குரேஷியாவை சந்திக்கிறது அர்ஜென்டினா. இந்த உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி தள்ளுங்க. லியோனல் மெஸ்ஸியின் மேஜிக் ஆட்டம் இன்று கண்டிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குரேஷியா, அர்ஜென்டினா விளையாடுகின்றன.
----
பிரிவு டி
அர்ஜென்டினா - குரேஷியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி
----
டி பிரிவில் இதுவரை...

* அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் டிரா செய்தது.
* குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது

டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. நைஜீரியா புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
இந்த உலகக் கோப்பை போட்டியில் பல ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் கடந்த ஒரு வாரத்தில் அரங்கேறியது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி தோல்வி என பல அதிர்ச்சிகள் இருந்தாலும், அர்ஜென்டினாவின் டாப் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியின் மேஜிக் நடக்காததே ரசிகர்களை அதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா கடைசியாக பங்கேற்ற 12 உலகக் கோப்பைகளில் 11ல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2002ல் மட்டுமே பிரிவு சுற்றில் வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.

கடைசியாக நடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் பிரிவுச் சுற்றில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருந்தது. கடந்த 6 உலகக் கோப்பைகளில் முதல் ஆட்டத்திலும் வென்றுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் அர்ஜென்டினா விளையாடியது. இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. கடந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற்ற அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காதது மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவுடன் குரேஷியா மோதியது. அந்த ஆட்டத்தில் குரேஷியா 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது.

இன்று நடக்கும் ஆட்டத்தில், டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குரேஷியாவுடன் அர்ஜென்டினா விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அர்ஜென்டினா தக்க வைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லியோனஸ் மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான மேஜிக்கை நிகழ்த்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

Story first published: Thursday, June 21, 2018, 9:48 [IST]
Other articles published on Jun 21, 2018
English summary
Argentina to meet croatia in the group d match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+