Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து அணியில் சேர ஹார்மோன் ஊசி போட்டு வளர்ந்த மெஸ்சி- சுவாரசிய தகவல்கள்

ரியோடி ஜெனிரோ: கால்பந்தாட்டம் விளையாடுவதையே கனவாக கொண்டு ஹார்மோன் ஊசி போட்டு தனது உயரத்தை அதிகப்படுத்திய லியோனல் மெஸ்சியின், உழைப்பு வீண்போகவில்லை. ஆம்... 24 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு மெஸ்சிதான் கேப்டன்.

உயரம் கம்மி

உயரம் கம்மி

அர்ஜென்டினாவில் பிறந்த லியோனல் மெஸ்சிக்கு சிறுவயது முதலே கால்பந்தாட்டம்தான் கனவு. இருப்பினும், 9வது வயதில் அவர் 1.27 மீட்டர் மட்டுமே உயரம் இருந்தார். 6 வயது சிறுவனுக்குரிய உயரம்தான் அப்போது மெஸ்சிக்கு இருந்தது.

கூச்ச சுபாவம் உண்டு

கூச்ச சுபாவம் உண்டு

இதனால் கால்பந்தாட்ட அணியில் இவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து சிறுவயதில் படிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மோனிகா டோமினா கூறுகையில், "சிறுவயதில் மெஸ்சி பிற குழந்தைகளைவிட மிகவும் குட்டியாக இருப்பார். அடிக்கடி அவரை தூக்கி வைத்து கொஞ்சுவேன். மிகவும் கூச்ச சுபாவம் உண்டு" என்றார்.

திருப்புமுனை

திருப்புமுனை

உயரம் ஒரு தடையாக மாறுவதை உணர்ந்த மெஸ்சி, தனது உயரத்தை அதிகரிக்க டாக்டர்களை தேடி அலைந்தார். அப்போதுதான் ஒரு திருப்புமுனையாக டாக்டர் டிகோ ஜேகோஸிடம், மெஸ்சி சென்றடைந்தார்.

நான் உயர்கிறேனே..

நான் உயர்கிறேனே..

பல கட்ட உடல் பரிசோதனைகளை எடுத்து பார்த்த டாக்டர், உங்களை, அர்ஜென்டினாவின் ஜாம்பவான் கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவைவிட உயரமாக்கி காண்பிக்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்படி விலை உயர்ந்த ஹார்மோன் ஊசிகளை மெஸ்சி எடுத்துக்கொண்டார்.

மாரடோனாவைவிட அதிகம்

மாரடோனாவைவிட அதிகம்

தற்போது மெஸ்சி 1.69 மீட்டர் உயரமுள்ளவராக உள்ளார். 1.75 மீட்டர் உயரம் கொண்ட பிரேசிலின் நெய்மரைவிட இந்த உயரம் குறைவாக இருக்கலாம். ஆனால், மாரடோனா 1.65 மீட்டர்தான் உயரமுள்ளவர் என்பதால் டாக்டர் தனது சபதத்தை நிறைவேற்றி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

கால்பந்துதான் உயிர்

கால்பந்துதான் உயிர்

மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மெஸ்சியின் முன்னாள் பயிற்சியாளர் எமஸ்டோ தனது பழைய நினைவுகளை இப்படி பகிர்ந்து கொண்டார். "மெஸ்சி சிறுவயதிலேயே உடன் விளையாடும் பிற சிறுவர்களைவிட தனித்து தெரிவார். மெஸ்சியிடம் மட்டும் சமயோஜித புத்தி, வேகம் அதிகம் உள்ளதை பார்த்துள்ளேன். இளம் வயதினர், பெண்களை கவரவேண்டும் என்பதற்காக வளர ஆசைப்படுவார்கள், ஆனால் மெஸ்சியோ, கால்பந்தாட்ட அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக வளர ஆசைப்பட்டார்" என்று தெரிவித்தார்.

தாய்நாட்டினர் எதிர்பார்ப்பு

தாய்நாட்டினர் எதிர்பார்ப்பு

மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா கோப்பையை வென்று, தாயகத்திற்கு திரும்பும் என்று அந்த நாட்டில் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். அதுவும் தங்கள் செல்ல பிள்ளை மெஸ்சி கையால் அந்த கோப்பையை பெற்றுத்தருவதை பார்க்க ஞாயிற்றுக்கிழமைக்காக அர்ஜென்டினா மக்கள் தவம் இருக்கிறார்கள்.

Story first published: Friday, July 11, 2014, 16:44 [IST]
Other articles published on Jul 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+