Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"காயமடைந்தாரா?" பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள அர்ஜென்டினா அணி.. பயிற்சியில் ஈடுபடாத மெஸ்ஸி!

தோஹா: அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயம் காரணமாக சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டுக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இதற்காக கத்தார் நாட்டிற்கு இரு நாட்கள் முன்பே அர்ஜென்டினா அணி வந்து இறங்கியுள்ளது.

இதுவரை 1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடைசி உலகக்கோப்பை

கடைசி உலகக்கோப்பை

இந்த முறை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்படுகிறது. ஏற்கனவே 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளதால், இம்முறை கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்ல வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கேற்ப அர்ஜென்டினா அணியில் உள்ள வீரர்கள் அனுபவமும், இளமையும் மிகுந்து காணப்படுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் அர்ஜென்டினா

பல்கலைக்கழகத்தில் அர்ஜென்டினா

அதேபோல் கத்தார் நாட்டின் சூழலுக்கு ஏற்ப அர்ஜென்டினா அணி முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலும் கால்பந்து தொடர்களில் விளையாடும் அணிகள் நட்சத்திர விடுதியை தான் வீரர்கள் தங்க தேர்வு செய்யும். ஆனால், அர்ஜென்டினா அணி கத்தார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளது. இதற்கான காரணம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் சூழல்

கத்தார் சூழல்

கத்தார் நாட்டின் சூழலும், வெப்பமும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த அணியினருக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே கத்தார் பல்கலைக்கழகத்தில் அர்ஜென்டினா அணி தங்கும் இந்த ஏற்பாடும் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பயிற்சி மேற்கொள்ளும் இடம் மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றுக்கு தூரம் 100 மீட்டர் மட்டுமே என்பதால், வீரர்களும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

காயமடைந்தாரா மெஸ்ஸி?

காயமடைந்தாரா மெஸ்ஸி?

இதனிடையே அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்படாமல் இருக்க, அவர் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்ஜென்டினா அணியினருடன் பயிற்சியை மேற்கொள்ளாமல், தனியாகவே பயிற்சி செய்வதாகவும், உடற்பயிற்சி கூடத்திலும் எச்சரிக்கையாக பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மெஸ்ஸிக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, அவர் சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, November 20, 2022, 18:07 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+