Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஓய்வுபெறாதே லியோ" மெஸ்ஸியின் வெற்றிக்கு காரணமான சூத்திரதாரி.. பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி!

தோஹா: அர்ஜென்டினா அணிக்கு 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த சூத்திரதாரியான லயோனல் ஸ்கலோனி செய்த திட்டங்கள் மற்றும் அவரின் அணுகுமுறை பற்றி பார்க்கலாம்.

"வாழ்க்கையில் நாம் எத்தனை முறை கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல.. விழுகிற போதெல்லாம் எழுந்து நிற்கிறோமா என்பது தான் கேள்வி" லயோனல் மெஸ்ஸி தோல்வியடைந்த போது, கண்ணீரில் அழுத புகைப்படங்களையும், தற்போது வெற்றிபெற்ற போது உலகக்கோப்பையை ஏந்தும் புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் மேல் உள்ள வாசகத்துடன் பதிவிடப்பட்டிருந்தது.

இதற்கு பின் மறைமுக ஒரு கேள்வியும் ஒன்று ஒளிந்துள்ளது. கீழே விழுந்த துயரில் இருந்த மெஸ்ஸியை, தூக்கிவிட கைகள் இருந்திருக்கும் அல்லவா.. அந்த கைகள் யாருடையது என்பது தான் அந்த மறைமுக கேள்வி. அந்த கேள்விக்கான பதிலை தேடியபோது கிடைத்த பதில், ஒரு பெயர்.. அந்த பெயர் லயோனல் ஸ்கலோனி.

திக்குமுக்காட வைத்த ஸ்கலோனி

திக்குமுக்காட வைத்த ஸ்கலோனி

36 ஆண்டுகளாக உலகக்கோப்பையை எப்போதும் வெல்வோம் என்று ஏங்கிய அர்ஜென்டினா மக்களின் கனவை நிறைவேற்றியவர். 18 காலமாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவுடன் பயணித்த லயோனல் மெஸ்ஸிக்கு, வழிகாட்டியாக உடனிருந்து கரை சேர்த்தவர். காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என்று ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஃபார்மேஷனில் களமிறங்கி எதிரணிகளை திக்குமுக்காட வைத்தவர்.

ஸ்கலோனி ட்வீட்

ஸ்கலோனி ட்வீட்

2016ம் ஆண்டு லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது, "போகாதே லியோ" என்று பதிவிட்டிருந்தார் லயோனல் ஸ்கலோனி. பின்னர் ஓய்வை திரும்ப பெற்று மெஸ்ஸி மீண்டும் கால்பந்து விளையாட்டிற்கு திரும்பினாலும், தோல்விகள் மட்டும் துரத்திக்கொண்டே இருந்தது. 2018ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியடைந்த போது, ஸ்கலோனி அந்த அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்தார்.

மாரடோனா எதிர்ப்பு

மாரடோனா எதிர்ப்பு

அதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற லயோனல் ஸ்கலோனிக்கு, போதுமான அனுபவம் இல்லை என்று கடுமையான எதிர்ப்பு இருந்தது. யார் எதிர்ப்பு தெரிவித்தார் என்ற கேள்விக்கு பதில், கால்பந்து ஜாம்பவான் மாரடோனா. இதற்கு ஸ்கலோனி எந்த பதிலையும் அளிக்கவில்லை. பதிலாக அர்ஜென்டினா அணியை 2019ம் ஆண்டு கோபா அமெரிக்கா அரையிறுதி வரை கொண்டு சென்றார்.

35 போட்டிகளில் வெற்றி

35 போட்டிகளில் வெற்றி

அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வெல்ல, ஸ்கலோனியை கேள்வி கேட்க யாரும் முன்வரவில்லை. அதற்கு காரணம், அர்ஜென்டினா அடுத்ததாக விளையாடிய 35 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு திட்டம், ஒவ்வொருய் அணிக்கும் ஒரு வியூகம் என ஸ்கலோனியின் அணுகுமுறை பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

ஸ்கலோனி எடுத்த முடிவு

ஸ்கலோனி எடுத்த முடிவு

உலகக்கோப்பைத் தொடரில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்த போதும், சலனமே இல்லாமல் அடுத்த போட்டி முதலே சம்பவங்களை தொடங்கினார். குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டம் கூடுதல் நேரத்தில் இருந்தபோதே, அணியை பெனால்டி ஷூட் அவுட்டிற்கு தயார் செய்தது, போட்டியின் முடிவையே மாற்றியது.

ஸ்கலோனியின் அணுகுமுறை

ஸ்கலோனியின் அணுகுமுறை

அதேபோல் மெஸ்ஸியை கோல் அடிக்க மட்டும் பயன்படுத்தாமல், கோல் அசிஸ்ட் செய்ய வைப்பதற்கு முன்னிலை கொடுத்தது. அர்ஜென்டினா அணியின் ஆல்வரஸ், ஃபெர்னாண்டெஸ், டீ பால் ஆகியோரை சரியாக பயன்படுத்தியது என்று அனைத்து முடிவுகளையும் ஸ்கலோனி எடுத்தார். எல்லாவற்றையும் கடந்து மெஸ்ஸியின் மனநிலையை சரியாக கையாண்டது தான் ஸ்கலோனி செய்த முக்கிய செயல்.

ஸ்கலோனி பற்றி மெஸ்ஸி

ஸ்கலோனி பற்றி மெஸ்ஸி

பயிற்சியாளர் ஸ்கலோனி மற்றும் இளம் வீரர்களோடு விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்நாளின் மிகச்சிறந்த பகுதி என்று மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார். ஸ்கலோனியின் அணுகுமுறையும், திட்டமிடலும் தான் துவண்டு போயிருந்த அர்ஜென்டினா அணியை உச்சத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. வீரராக அர்ஜென்டினா அணிக்கு செய்ய முடியாததை, பயிற்சியாளராக செய்து முடித்துள்ளார் லயோனல் ஸ்கலோனி. லயோனல் மெஸ்ஸியும், அர்ஜென்டினா மக்களும் அதிகமாக ஸ்கலோனிக்கு கடமைபட்டுள்ளார்கள் என்று சொல்லும் அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளார்.

Story first published: Monday, December 19, 2022, 14:17 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+