அடடே… இங்கிலாந்து ஆர்சினல் கால்பந்து அணியின் உயர் பதவியில் இந்தியர் ஒருவர் நியமனம்
லண்டன் : இங்கிலாந்து கால்பந்து கிளப் அணியான ஆர்சினல் அணி உயர் பதவியில் இந்திய பூர்விகம் கொண்ட வினய் வெங்கடேசம் என்பவரை நியமித்துள்ளது.
இங்கிலாந்து உள்ளூர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று வரும் ஆர்சினல் அணி, பெரும் வருமானம் ஈட்டும் கால்பந்து கிளப்களில் ஒன்று. இந்த அணியில் சமீபத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த காஸிடி பதவி விலகினார்.

அதை தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, இந்திய பூர்வீகம் கொண்ட வினய் வெங்கடேசம் ஆர்சினல் அணியின் மானேஜிங் டைரக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவர் 2010 முதல் அந்த அணியில், தலைமை வணிக அதிகாரியாக இருந்தவர். மேலும், அதே அணியில் சர்வதேச கூட்டுறவு, விற்பனை பிரிவு அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். இப்போது, அணி நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் நிகழ்த்த வேண்டிய சூழலில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், வினய் வெங்கடேசம் பிரிட்டிஷ் ஒலிம்பிக் அமைப்பு, IAAF உலக சாம்பியன்ஷிப், உலக பாரா அத்லெடிக்ஸ் உள்ளிட்ட உயரிய விளையாட்டு அமைப்புகளில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications