Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 கோல் அடித்த ஆர்சனல்.. கதறிய ஷெஃபீல்ட் அணி.. பிரீமியர் லீக்கில் மெகா வெற்றி

லண்டன் : பிரீமியர் லீக் தொடரின் லீக் போட்டியில் மைக்கேல் ஆர்டெட்டாவின் ஆர்சனல் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று வரலாறு படைத்தது. இந்த பெரிய வெற்றி மூலம் ஆர்சனல் 2 புள்ளிகள் பெற்றது.

பிரீமியர் லீக் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ள அணிகளாக பார்க்கப்படும் லிவர்பூல், நாட்டிங்காம் ஃபாரெஸ்ட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட்டையும் தோற்கடித்ததைக் கண்ட மைக்கேல் ஆர்டெட்டாவின் ஆர்சனல் அணி சாம்பியன்ஷிப் வெல்லும் போட்டியில் நாங்களும் இருக்கிறோம் என பதிலளிக்க முடிவு செய்து ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல், 6 கோல் அடித்து இருக்கின்றனர்.

இது கன்னர்ஸின் ஏழாவது தொடர்ச்சியான பிரீமியர் லீக் வெற்றியாகும். மேலும் ஆர்சனல் அணி மற்ற அணிகளின் மைதானத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களால் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்ற முதல் ஆங்கில லீக் அணியாக சாதனை படைத்தது.

இதற்கு நேர்மாறாக, ஷெஃபீல்ட் யுனைடெட் அணி தன் சொந்த மைதானத்தில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Arsenal produce devastating display to hit sorry Sheffield United for six

ஷெஃபீல்ட் யுனைடெட் ரசிகர்கள் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் அவமானகரமான முதல் பாதியைப் பார்த்தனர், முதல் பாதியிலேயே ஆர்சனல் 5 கோல் அடித்தது. முதல் 15 நிமிடங்களில் மார்ட்டின் ஒடேகார்ட் மற்றும் கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் கோல் அடித்தனர். அவர்களுடன் ஜெய்டன் போகல்-உம் கோல் அடித்தார்.

காய் ஹாவெர்ட்ஸ் மற்றும் டெக்லான் ரைஸ் ஆகியோர் பாதி நேரத்தில் கோல் அடித்தனர். ஆர்சனலின் ஆறாவது கோலை ஒயிட் அற்புதமாக அடித்தார். இது ஆர்சனல் கிளப் வரலாற்றில் 10,000வது கோல் ஆகும்.

Story first published: Tuesday, March 5, 2024, 19:36 [IST]
Other articles published on Mar 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+