Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ட்விஸ்ட்.. ஜப்பானை பந்தாடிய ஈரான்.. ஆசிய கோப்பை கால்பந்து அரை இறுதிக்கு தகுதி

ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. ஈரான் அணியின் அலிரேசா ஜஹான்பக்ஷின் கடைசி நிமிட பெனால்டியால் அந்த அணி வெற்றி பெற்றது. மேலும் ஆசிய கோப்பை சாம்பியன் ஆன கத்தாருக்கு எதிரான அரையிறுதியில் ஆட தகுதி பெற்றது ஈரான்.

ஈரான் மூன்று முறை ஆசிய கோப்பை வென்றுள்ளது. கடைசியாக 1976இல் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் தற்போது அந்த அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை நோக்கி நகர்ந்து இருக்கிறது. அந்த அணியின் ஜஹான்பக்ஷ் 96வது நிமிடத்தில் நிதானமாக இருந்து கோல் அடித்ததால் வெற்றி பெற்று நான்காவது கோப்பை வெல்லும் கனவை நோக்கி நகர்ந்து இருக்கிறது.

எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்த காலிறுதிப் போட்டியின் முதல் பாதியில் ஜப்பான் வீரர் ஹிடெமாசா மொரிட்டா போட்டிக்கு முதல் கோல் அடித்து ஈரான் அணியை பின்னுக்கு தள்ளினார்.

ஆனால் 55வது நிமிடத்தில் ஈரான் அணியின் மொஹமட் மொஹேபி கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நட்சத்திர ஸ்ட்ரைக்கர் மெஹ்தி தரேமி இல்லாமல் ஈரான் வெற்றி பெற்றுள்ளது இன்னும் சிறப்பாக இருந்தது.

Asian Cup: Iran and Qatar complete semi-final line up

இதற்கிடையில், அல் பேட் மைதானத்தில் நடந்த மற்றொரு காலிறுதியில் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த உஸ்பெகிஸ்தானை பெனால்டியில் தோற்கடித்த கத்தார் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. அதன் பின்னர் ஈரான் அணியும் காலிறுதியில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு அணிகளும் தற்போது அரை இறுதியில் மோத உள்ளன.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ஜோர்டானுக்கு எதிராக தென் கொரியா மோத உள்ளது. அந்தப்ப் போட்டிக்கு பின் ஒரு நாள் கழித்து, ஈரான் புதன்கிழமை அன்று கத்தாரை எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, February 4, 2024, 16:07 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+