Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 மாசமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஎஸ்எல் தொடர்... நாளை இறுதிப்போட்டி

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் இறுதிப்போட்டி நாளைய தினம் கோவாவில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

கடந்த 5 மாதங்களாக கால்பந்தாட்ட ரசிகர்களை கட்டிப்போட்டி ஐஎஸ்எல் 2020 -21 தொடர் லீக் போட்டிகள், ப்ளே-ஆப் சுற்றுகளை தாண்டி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

தற்போது இறுதிப்போட்டியில் மோதவுள்ள இரு அணிகளும் லீக் போட்டிகளில் ஏற்கனவே மோதிய நிலையில் மும்பை சிட்டி எப்சி அணி இரு முறையும் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து மோஹுன் பகன் அணி நாளைய போட்டியில் தீவிரமாக இறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நாளை இறுதிப்போட்டி

நாளை இறுதிப்போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடர் கடந்த 5 மாதங்களாக இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வந்தது. கால்பந்தாட்ட ரசிகர்களை சர்வதேச அளவில் கட்டிப்போட்ட இந்த தொடர் தற்போது லீக் சுற்றுகள், ப்ளே-ஆப் சுற்றுகளை கடந்து நாளைய தினம் இறுதிப்போட்டியுடன் முடிவடைய உள்ளது.

மோஹுன் பகன் -மும்பை சிட்டி

மோஹுன் பகன் -மும்பை சிட்டி

இறுதிப்போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் நாளைய தினம் மோதவுள்ள நிலையில், இந்த இரு அணிகளும் ஏற்கனவே லீக் சுற்றில் இரு முறை மோதியுள்ளன. இந்த இரு போட்டிகளிலும் மும்பை சிட்டி எப்சி வெற்றி பெற்றுள்ளது. லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் முதலிடத்தில்இருந்த மோஹுன் பகன் அணியை வெற்றி கொண்டு வின்னர்ஸ் கோப்பையையும் கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி

இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி

மும்பை சிட்டி எப்சி அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே அந்த அணி தனது ஆதிக்கத்தை சிறப்பாக தொடர்ந்து வந்தது. அரையிறுதிப் போட்டியிலும் எப்சி கோவா அணியை சிறப்பாக வெற்றி கொண்டது.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இதேபோல மோஹுன் பகன் அணியும் அரையிறுதியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை சிறப்பாக வெற்றி கொண்டு, தனது முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் இதுவரை ஆடியுள்ள போட்டிகளில் இரு அணிகளும் 5 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் டிராவும் பெற்று சமநிலையில் உள்ளன.

Story first published: Friday, March 12, 2021, 15:42 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+