Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது இடத்தில் வலிமையாக உள்ள மோஹுன் பகன் அணி... கேரளா பிளாஸ்டர்சுடன் மோதல்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 78வது போட்டி படோர்டாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இன்றைய வார இறுதியின் இரண்டாவது போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் இரண்டாவது மற்றும் 9வது இடத்தில் உள்ள இந்த அணிகள் மோதவுள்ளன.

78வது போட்டி

78வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 78வது போட்டி இன்றைய தினம் படோர்டாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 2வது இடத்தில் வலிமையாக உள்ள ஏடிகே மோஹுன் பகன் மற்றும் 9வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

வலிமையான மோஹுன் பகன்

வலிமையான மோஹுன் பகன்

இந்த தொடரில் துவக்கம் முதலே நிலையான ஆட்டங்களை தரத் தவறியுள்ளது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. இந்நிலையில் அந்த அணியை மோஹுன் பகன் அணி இந்த போட்டியில் வெற்றி கொண்டு தனது நிலையை தொடர்ந்து தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி பெறும் தீவிரம்

வெற்றி பெறும் தீவிரம்

கடந்த நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் மோஹுன் பகன் அணி தோல்வியுற்றுள்ள நிலையில், தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ஆயினும் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி கொண்டு 24 புள்ளிகளுடன் 2வது இடத்தில் வலிமையாக உள்ளது மோஹுன் பகன் அணி.

வெற்றி பெறும் கட்டாயம்

வெற்றி பெறும் கட்டாயம்

இந்நிலையில் இதுவரை விளையாடியுள்ள 15 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த இரு அணிகளும் மோதிய நிலையில், மோஹுன் பகன் அணி வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற வேண்டிய தீவிரத்தில் உள்ளது.

Story first published: Sunday, January 31, 2021, 20:54 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+