For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை.... டென்மார்க்குடன் டிரா செய்தது... அடுத்தச் சுற்றக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்குடன் டிரா செய்தது ஆஸ்திரேலியா.

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்குடன் 1-1 என டிரா செய்தது ஆஸ்திரேலியா. அடுத்து நடைபெறும் பிரான்ஸ், பெரு ஆட்டத்தின் முடிவில் தான், அடுத்தச் சுற்றுக்கு யார் முன்னேறுவர் என்பது தெரியவரும்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் விளையாடுகின்றன.

Australia and denmark match ended in draw in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. சி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டென்மார்க் அணியுடன் 1-1 என ஆஸ்திரேலியா டிரா செய்தது. அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸை பெரு சந்திக்கிறது.
----
பிரிவு சி
டென்மார்க் - ஆஸ்திரேலியா
1 - 1
----
சி பிரிவில் இதுவரை...
* பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.
* டென்மார்க் 1-0 என பெருவை வென்றது
* டென்மார்க் 1 - 1 என ஆஸ்திரேலியாவுடன் டிரா
சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் டென்மார்க் 4 புள்ளிகளுடன் உள்ளது. பிரான்ஸ் 3, ஆஸ்திரேலியா 1 புள்ளியுடன் உள்ளன. பெரு புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது. ஆஸ்திரேலியா 2006ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியதே அதன் சிறப்பான ஆட்டமாகும். கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது

சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வென்றது. இதன் மூலம் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்தன.

இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க், ஆஸ்திரேலியா மோதின. ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் எரிக்சன் கோலடிக்க டென்மார்க் 1-0 என முன்னிலை பெற்றது. 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜெடினாக் கோலடிக்க சமநிலை உருவானது. அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ், பெரு மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில்தான், அடுத்தச் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்பது தெரியும். பிரான்ஸ் வென்றால் அது அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Thursday, June 21, 2018, 19:44 [IST]
Other articles published on Jun 21, 2018
English summary
Australia and denmark match ended in draw in the group c match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+