Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் உலக கோப்பை தொடர் 2023 -ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கூட்டாக நடத்த திட்டம்

சூரிச் : வரும் 2023ல் பெண்கள் உலக கோப்பை கால்பந்தாட்டத் தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

Recommended Video

Dhoni turns coach, set to launch Cricket academy

கடந்த 1991 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரை முதல் முறையாக இரு நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

இந்த தொடர் 12 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 7 மற்றும் நியூசிலாந்தில் 5 நகரங்களில் நடத்தப்பட உள்ளன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நடத்துகிறது

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நடத்துகிறது

கடந்த 1991ம் ஆண்டு முதல் பெண்கள் உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென பல்வேறு நாடுகளும் போட்டியிட்டு அந்த உரிமையை கைப்பற்றும். இந்நிலையில் வரும் 2023ம் ஆண்டிற்கான இந்த போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து பெற்றுள்ளன. பிபா கவுன்சில் சார்பில் நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக இருநாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்தவுள்ளது முடிவாகியுள்ளது.

ஆஸி, நியூசி அணிகள் உரிமை

ஆஸி, நியூசி அணிகள் உரிமை

பல்வேறு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் கொலம்பியாவிடம் இருந்து இந்த உரிமையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பெற்றுள்ளன. பெண்கள் கால்பந்தாட்டத்தில் 7வது ரேங்கில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் 23ம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிகள், 25வது இடத்தில் உள்ள கொலம்பியாவிடம் இருந்து இந்த உரிமையை தட்டிப் பறித்துள்ளன.

32 அணிகள் பங்கேற்பு

32 அணிகள் பங்கேற்பு

12 நகரங்களில் இந்த கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில், 7 ஆஸ்திரேலிய நகரங்கள் மற்றும் 5 நியூசிலாந்து நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த 2000ல் சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட முக்கிய மைதானத்திலும் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த 2019 போட்டித் தொடரிலிருந்து மேலும் 8 அணிகள் இணைந்து 32 அணிகள் இந்த போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.

பரிசுத்தொகை அறிவிப்பு

பரிசுத்தொகை அறிவிப்பு

இந்த தொடரில் 100 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு 5க்கு 4.1 ரேட்டிங் கிடைத்துள்ளது. மாறாக கொலம்பியாவிற்கு 2.8 ரேட்டிங்கே கிடைத்துள்ளது. மூன்றாவதாக களமிறங்கிய ஜப்பான், கடந்த வாரத்தில் போட்டியிலிருந்து விலகியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எளிதாக தொடருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Friday, June 26, 2020, 18:19 [IST]
Other articles published on Jun 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+