Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது டிரைவிங் லைசென்ஸ் எடுக்கணுமா? அதெல்லாம் முடியாது.. 39 லட்சம் அபராதம் வேணா கட்டுறேன்!!

பார்சிலோனா : ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் ஆடி வரும் ஜெரார்ட் பிக் என்ற வீரர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் கார் ஒட்டிய குற்றத்துக்கு அபராதம் செலுத்தியுள்ளார்.

ஜெரார்ட் இந்திய மதிப்பில் சுமார் 39 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.

அவர் டிரைவிங் லைசென்ஸ் வாங்க குறிப்பிட்ட படிப்பை படிக்க வேண்டும் என்ற நிலையில், அதை செய்யாமல் அபராதம் செலுத்தியுள்ளார் ஜெரார்ட்.

வாக்குவாதம் செய்தார்

வாக்குவாதம் செய்தார்

ஜெரார்ட் கடந்த 2015இல் காவலர்களோடு காரை நோ-பார்க்கிங்கில் விட்ட விவகாரத்தில் சண்டை போட்டுள்ளார். அப்போது அவருக்கு 8.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. அப்போது காவலர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் அளித்த ரசீதை கசக்கி கீழே எறிந்தார்.

லைசென்ஸ் தடை

லைசென்ஸ் தடை

இது தவிர்த்து, ட்ராபிக் விதிகளை பின்பற்றாத காரணத்தால் ஸ்பெயின் நாட்டின் விதிப்படி அவரது லைசென்ஸ் புள்ளிகள் குறைந்து ஆறு மாதம் வரை லைசென்ஸ் தடை செய்யப்பட்டது. மீண்டும், லைசென்ஸ் வாங்க ட்ராபிக் விதிகள் பற்றிய படிப்பை படித்து அதில் தேர்ச்சி பெற வேண்டும்.

மீண்டும் மாட்டிக்கொண்டார்

மீண்டும் மாட்டிக்கொண்டார்

கடந்த ஜூன் மாதம் முதல் இதை ஜெரார்ட் படித்திருக்க முடியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. மாறாக லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி மீண்டும் காவலர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

அபராதம் செலுத்தினார்

அபராதம் செலுத்தினார்

வழக்கில் 39 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு கூறப்பட்டது. அதை ஏற்ற ஜெரார்ட் புன்னகையுடன் அந்த பணத்தை செலுத்தினார். நீதிமன்றத்தின் வெளியே, செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் கிளம்பி விட்டார் ஜெரார்ட். இனிமேலாவது லைசென்ஸ் எடுப்பாரா? இல்லை இப்படி அசால்ட்டா 39 லட்சம் அபராதம் செலுத்துவாரா?

Story first published: Tuesday, November 27, 2018, 18:51 [IST]
Other articles published on Nov 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+