
சவால் அளிக்குமா ஸ்பெயின்?
ஏனென்றால் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஜப்பான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் அணி தங்களின் முதல் போட்டியில் கோஸ்ட்டா ரிக்கா அணியுடன் மோதவுள்ளது. கோஸ்ட்டா ரிக்கா அணி பலம் குறைவாக இருந்தாலும், அண்டர்டாக் அணியாக பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்பெயின் அணிக்கு அந்த அணி சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியாளரின் மகளுடன் காதல்
ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் 22 வயதாகும் ஃபெரான் டோரஸ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் என்ரிக்கின் மகளான சிரா மார்ட்டினிஸ் உடன் டோரஸ் காதல் உறவில் உள்ளார்.

டோரஸ் பதில்
இந்த நிலையில் பயிற்சியாளரின் மகளுடன் காதல் உறவில் இருப்பதால் ஏதேனும் பிரஷர் இருக்கிறதா என்று டோரஸிடம் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டோரஸ், காதலால் எந்த அழுத்தமும் இல்லை. பயிற்சியாளருக்கும் எனக்கும் குடும்பத்தையும், களத்தையும் பிரிந்து பார்க்க தெரியும். அதனால் எனக்கு எந்த பிரஷரும் இல்லை என்று தெரிவித்தார்.

லூயிஸ் என்ரிக் கிண்டல்
சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் அணி பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கிடம், உங்களின் பிரதிபலிப்பாக களத்தில் யார் இருக்கிறார்கள் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது மிகவும் எளிமையான கேள்வி. அது நிச்சயம் ஃபெரான் டோரஸ் தான். இந்த பதிலை நான் அளிக்காவிட்டால், என் மகள் என்னை கொலையே செய்துவிடுவான் என்று கிண்டலாக பதில் அளித்திருந்தார்.


Click it and Unblock the Notifications













