Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பெல்ஜியம்!

Belgium may be a surprise lot in the fifa world cup

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு : பெல்ஜியம்
ஜி பிரிவில் இங்கிலாந்து, துனீஷியா மற்றும் பனாமாவுடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 18ல் பனாமா
ஜூன் 23ல் துனீஷியா
ஜூன் 27ல் இங்கிலாந்து

பிபா தரவரிசை : 3

கடந்த உலகக் கோப்பையில் : கால் இறுதியில் அர்ஜென்டீனாவிடம் தோல்வி

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1986ல் நான்காவது இடம்.

முக்கிய வீரர்கள் : எடன் ஹசார்ட், கெவின் டி புரூனே, ரோமேலு லுகாகு, திபாவுத் கோர்டோயிஸ்.

கோச் : ராபர்டோ மார்டினஸ்
---
மற்ற நாடுகள் பயப்படும் அளவுக்கு, பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறந்த நடுகள வீரர்களை பெல்ஜியம் கொண்டுள்ளது. ஆனால், மிகவும் முக்கியமான போட்டிகளில் பெல்ஜியம் மொத்தமாக சொதப்பிவிடும்.

2014 உலகக் கோப்பை காலிறுதி, 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் என பல உதாரணங்களைக் கூறலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்தால், பெல்ஜியத்தை அடிச்சிக்க ஆளே இல்லை என்றே கூறலாம்.

உலகின் மிகச் சிறந்த நடுகள வீரர்களான செல்சியாவின் எடன் ஹசார்ட், மான்செஸ்டர் சிட்டியின் கெவின் டி புருனே ஆகியோர் பெல்ஜியம் அணிக்காக விளையாடுகின்றனர். 2017-18 பிரீமியர் லீக் ஆட்டங்களில் புருனே 21 கோல்களை அடித்ததுடன், 21 கோல்கள் அடிப்பதில் உதவி புரிந்துள்ளார். ஹசார்ட் 17 கோல்களை அடித்ததுடன், 13 கோல்களை அடிக்க உதவி செய்துள்ளார்.

இவர்களுடன், முன்கள வீரர்களான ரோமேலு லுகாகு, டிரைஸ் மெர்டன்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால், பெல்ஜியம் காட்டில் கோல் மழைதான். உலகின் மிகச் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவரான தியாவுத் கோர்டோயிஸ் உள்ளது பெல்ஜியம் அணிக்கு மிகப் பெரிய பலம்.

இந்த அனைத்தையும் ஒருங்கே சேர்ப்பதில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் பெல்ஜியத்தின் வெற்றி உள்ளது. மிக அதிக திறமைகளை வைத்துள்ள பெல்ஜியம் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்து காலிறுதி வரை முன்னேறுவது நிச்சயம்.

Story first published: Monday, June 4, 2018, 10:40 [IST]
Other articles published on Jun 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+