Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அறிமுக அணியான பனாமாவை பனாலாக்குமா பெல்ஜியம்!

belgium to meet panama in the fifa world cup

சோச்சி: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவுடன் மோதுகிறது 13 முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆடடத்தில் பெல்ஜியம், பனாமா மோதுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் துனீஷியாவுடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
----
பிரிவு ஜி
பெல்ஜியம் - பனாமா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
* கடைசியாக விளையாடிய 9 பிரிவு சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததில்லை. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

* 13வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது.

* பனாமா அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது.
--
முக்கிய வீரர்கள்
-----
பெல்ஜியம் - செல்சியா அணிக்காக விளையாடும் எடன் ஹசார்ட் தற்போது பார்மில் இல்லை. ஆனால் உலகக் கோப்பையில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பனாமா - பனாமாவின் முகமாக இருப்பவர் தடுப்பாட்டக்காரரும், கேப்டனுமான ரோமன் டாரஸ். 32 வயதாகும் மிகச் சிறந்த பின்கள தடுப்பாட்டக்காரரான இவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார்.
---
பிபா தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 55வது இடத்தில் உள்ள பனாமாவுடன் மோதுகிறது.

உலகக் கோப்பையில் மிக நீண்ட அனுபவம் உள்ள பெல்ஜியம் 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

மற்ற நாடுகள் பயப்படும் அளவுக்கு, பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறந்த நடுகள வீரர்களை பெல்ஜியம் கொண்டுள்ளது. ஆனால், மிகவும் முக்கியமான போட்டிகளில் பெல்ஜியம் மொத்தமாக சொதப்பிவிடும்.

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பனாமா பெற்றுள்ளது. அறிமுக அணியாக இருந்தாலும், உலகக் கோப்பையில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது.

குருட்டு அதிர்ஷ்டத்தில் உலகக் கோப்பையைக்கு தகுதி பெற்றுள்ள சீனியர் நிறைந்த பனாமா அணியை மிகவும் நீண்ட அனுபவம் உள்ள பெல்ஜியம் வெல்லுமா என்பதே கேள்வியாக உள்ளது. வெல்லும் என்று நம்பிக்கையுடன் கூறும் அளவுக்கு பெல்ஜியம் இல்லை.

Story first published: Monday, June 18, 2018, 1:34 [IST]
Other articles published on Jun 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+