Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம மேட்ச்.. 5-2 கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி.. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி!

மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் துனீஷியா அணியை 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது.

பெல்ஜியம் சூப்பர் ஸ்டார் ரோமேலு லுகாகு 2 கோல்கள் அடித்தார். அதேபோல இன்னொரு ஸ்டார் வீரரான ஈடன் ஹஸார்டும் 2 கோல்கள் அடித்து கலக்கி விட்டார். கடைசி நேரத்தில் இரு அணிகளும் அடுத்தடுத்து ஒரு கோலடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக மிக விறுப்பாக நடந்த போட்டி இதுதான்.

Belgium to meet tunisia in the fifa world cup

ஆட்டம் தொடங்கியது முதலே பெல்ஜியத்தின் "கால்" தான் ஓங்கியிருந்தது. துனீஷியாவை தடம் புரளச் செய்து விட்டது பெல்ஜியத்தின் பிரமாதமான ஆட்டம். 5வது நிமிடத்திலேயே ஈடன் ஹஸார்ட் பெல்ஜியத்தின் முதல் கோலை அடித்தார். அடுத்து 15வது நிமிடத்தில் ரோமேலு லுகாகு 2வது கோலை அடித்தார்.

ஆனால் துனீஷியா அடுத்த 2 நிமிடங்களில் பதிலடி கொடுத்தது. 17வது நிமிடத்தில் டைலான் பிரான் அபாரமான கோலடித்து பெல்ஜியத்தின் வேகத்திற்கு சற்று முட்டுக்கட்டை போட்டார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதாவது 47வது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கான 3வது கோலை அடித்தார் லுகாகு. இது அவருக்கு 2வது கோலாகும். லுகாகுவின் அருமையான கோலால் பெல்ஜியம் வலுவான நிலையை எட்டி விட்டது.

தொடர்ந்து 2வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே பெல்ஜியம் தனது 4வது கோலை அடித்தது. ஹஸார்ட் அருமையாக போட்ட இந்த கோலால் துனீஷியாவின் நிலை மேலும் பரிதாபமானது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பெல்ஜியம் தனது கட்டுப்பாட்டையும், கட்டுக்கோப்பையும் இழக்கவில்லை. அழகாக திட்டமிட்டு ஆடி அதகளப்படுத்தி விட்டனர்.

2வது ஆட்ட நேர இறுதியில் 89வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிட்சு பட்சுயாயி ஒருகோலடித்தார். ஆனால் 92வது நிமிடத்தில் துனீஷியா வீரர் வாபி ஒரு கோலடித்தார். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் போட்டி பெல்ஜியத்திற்கு சாதகமாக முடிந்தது.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் ஜி பிரிவில் இன்று நடந்த போட்டிக்குப் பின்னர் பெல்ஜியமும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என அறிமுக அணியான பனாமாவை வென்றது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. 13வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது.

பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில், சின்ன அணியுடன் விளையாடுகிறோம் என்று மெத்தனமாக விளையாடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பெல்ஜியம். 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா தனது முதல் வெற்றியை சுவைத்தது. அதன்பிறகு, இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. தற்போது ஐந்தாவது உலகக் கோப்பையில் துனீஷியா விளையாடுகிறது.

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக துனீஷியா கடுமையாக போராடியது. இன்றைய ஆட்டத்தில் துனீஷியாவை வென்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், பெல்ஜியம் கண்டிப்பாக விவேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப பெல்ஜியம் ஆடியது. ஆனால் துனீஷியாதான் ஏமாற்றி விட்டது.

Story first published: Saturday, June 23, 2018, 19:47 [IST]
Other articles published on Jun 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+