Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மாசம் காத்திருந்து ஏமாந்துட்டோம்.. கடுப்பில் கல் வீசி தாக்கிய ரசிகர்கள்.. பென்பிகா வீரர்கள் காயம்

லிஸ்பன் : போர்ச்சுகல் நாட்டு கால்பந்து கிளப் அணியான பென்பிகா அணி சென்ற பேருந்தின் மீது ரசிகர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

Recommended Video

IPL 2020 could be hosted outside the India

அதில் ஜெர்மனியை சேர்ந்த மிட்பீல்டர் ஜூலியன் வெய்கி மற்றும் செர்பியாவை சேர்ந்த விங்கர் ஆன்ட்ரிஜா ஜிவ்கோவிக் காயம் அடைந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே சுமார் மூன்று மாதம் கழித்து நடந்த போட்டியில் பென்பிகா அணி டிரா செய்ததே ரசிகர்களின் கோபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கால்பந்து நிறுத்தம்

கால்பந்து நிறுத்தம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. கால்பந்து ரசிகர்கள் அங்கே அதிகம். கொரோனா வைரஸ் அச்சத்தால் கால்பந்து போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் கால்பந்து ரசிகர்கள் பழைய போட்டிகளை பார்த்து ஆறுதல் அடைந்து வந்தனர்.

போர்ச்சுகல் கால்பந்து தொடர்

போர்ச்சுகல் கால்பந்து தொடர்

மூன்று மாத காலம் கழித்து அங்கே ஒவ்வொரு நாடாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பிரீமியர் லீக் எனப்படும் கிளப் அணிகளுக்கு இடையே ஆன கால்பந்து தொடரும் நீண்ட இடைவெளிக்கு பின் நடக்கத் துவங்கியது.

முதல் இடம்

முதல் இடம்

அதில் முன்னணி அணியான பென்பிகா, மற்றொரு முன்னணி அணியான போர்டோவை லீக் சுற்றில் சந்தித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பென்பிகா அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்று போட்டி அணியான போர்டோவை எளிதாக பின்தள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

போட்டி டிரா

போட்டி டிரா

ஆனால், அந்த இரு அணிகள் இடையே நடந்த பரபரப்பான போட்டி டிராவில் முடிந்தது. அதனால், பென்பிகா அணி ரசிகர்கள் கோபம் அடைந்தனர். மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில் பெரும் அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.

இரு வீரர்கள் காயம்

இரு வீரர்கள் காயம்

பென்பிகா வீரர்கள் சென்ற பேருந்து பாதி வழியில் சென்ற போது அதன் மீது கற்களை வீசி சில ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் இரு வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கற்களை வீசியவர்களை கண்டுபிடிக்காமல் விட மாட்டோம் என பென்பிகா அணி நிர்வாகம் கூறி உள்ளது.

Story first published: Friday, June 5, 2020, 21:25 [IST]
Other articles published on Jun 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+