Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் டீம் வீரரை இழிவாக பேசி விட்டார்.. தண்டனை கொடுங்க.. பொங்கிய கால்பந்து அணியின் பயிற்சியாளர்

வெஸ்ட் ப்ரோம் : பர்மிங்காம் அணியின் ஜூனின்ஹோ பகுனா என்ற வீரர் வெஸ்ட் ப்ரோமில் நடந்த போட்டியின் போது ஒருவர் இனரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டினார், பிர்மிங்காம் அணியின் பயிற்சியாளர் டோனி மவ்ப்ரே இந்த சம்பவத்துக்கு வலுவான தண்டனை வழங்க வேண்டும் என கோரினார்.

பிர்மிங்காம் - வெஸ்ட் ப்ரோம் இடையே ஆன போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் பிர்மிங்காம் அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஒரு வீரரின் காயம் காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்ட போது ஜூனின்ஹோ பகுனா நான்காவது ரெப்ரீயான டாம் நீல்டு-இடம் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை பற்றி புகார் கூறினார்.

Birmingham’s Juninho Bacuna makes racist abuse allegation during West Brom loss

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு ரெப்ரீ டேவிட் வெப்புடனும் பகுனா புகார் அளித்த போது கூட்டத்தை சுட்டிக்காட்டுவதைக் காண முடிந்தது. அதாவது கூட்டத்தில் ஒருவர் தன்னை இழிவாக பேசியதை அவர் சுட்டிக் காட்டினார்.

"சில பானங்கள் அருந்திய ஒருவர் போட்டிக்கு வருகிறார், சில இன துஷ்பிரயோக வாசகங்களை கத்துவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவர் உடனே அதை செய்கிறார். அவரை நீங்கள் தண்டிக்க வேண்டும்" என்று பயிற்சியாளர் மவ்ப்ரே கூறினார். "அந்த நபர் சிந்திக்க வேண்டும்: இது போன்ற செயலை செய்யும் முன் அவர் 'ஒரு நிமிடம் இருங்கள்'. என அவர் நிற்க வேண்டும்" என்றார்.

"நீங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும், அவர் இந்த தவறான வாசகத்தை கத்துகிறார். அதன்பின் மீண்டும் அவர் இந்த மைதானத்தில் கால்பந்து பார்க்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். இதன் விளைவுகள் கடுமையாக இருக்க வேண்டும். வெறும் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல முடியாது. அப்படிச் சொல்ல ஒருவரைத் தூண்டுவது எது?"

"பகுனா அவர் சொன்னதை என்னிடம் கூறினார், அந்த விஷயங்களைப் பகிர்வது பொருத்தமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அது வெளியே சொல்லுவதற்கு தகுதியான விஷயம் இல்லை."

"அந்த நபர் தனது செயல்களின் விளைவுகளை உணர வேண்டும். அதிகாரிகளின் கவனத்திற்கு பகுனா இந்த விவகாரத்தை கொண்டு சென்றது சரிதான். சரியான முடிவுகளை எடுப்பது யாருடைய வேலை, அதன் விளைவுகள் என்ன? அவர்கள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும், எனவே மற்றவர்களை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்வது பற்றி இருமுறை யோசிப்பார்கள்." என்றார் பயிற்சியாளர் மவ்ப்ரே.

செப்டம்பர் 2022 முதல் பகுனா மீது இனரீதியான துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

Story first published: Sunday, February 4, 2024, 16:47 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+