Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெய்மார் இல்லாத பிரேசில்.. உரசி பார்த்த சுவிட்சர்லாந்து.. கடைசி நேர கோல்.. யாருக்கு வெற்றி?

தோஹா: சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் குரூப் ஜி பிரிவில் உள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த இரு அணிகளில் யார் வெற்றிபெற்றாலும், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக விலகியதால், பிரேசில் அணி வெற்றிபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதேபோல் ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் அன்டர் டாக் அணியாக உள்ள சுவிட்சர்லாந்தும், வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கியது.

முதல் பாதி

முதல் பாதி

இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய நிமிடம் முதலே இரு அணிகளும் நிதானமாக ஆடின. பிரேசில் அணியில் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், சுவிட்சர்லாந்து டிஃபென்டர்களால் தடுக்கப்பட்டது. அதெபோல் சுவிட்சர்லாந்து அணியும் கோல் அடிக்க முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

கோல் சர்ச்சை

கோல் சர்ச்சை

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கத்திலேயே பரபரப்பானது. 55வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிஷியஸ் கொடுத்த கிராஸை, கோல் அடிக்காமல் ரிச்சர்லிசன் தவறவிட்டார். பின்னர் 64வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினிஷியஸ் முதல் கோல் அடித்தார். ஆனால் அது நடுவர்களால் ஆஃப் சைடு கொடுக்கப்பட்டு, கோல் திரும்பப் பெறப்பட்டது.

 முதல் கோல்

முதல் கோல்

இதனால் முதல் கோல் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இறுதியாக 83வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று வீரராக களமிறங்கிய கசீமிரோ முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றது.

பிரேசில் வெற்றி

பிரேசில் வெற்றி

இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், பிரேசில் அணி வீரர்கள் அடுத்த கோலை அடிக்கும் முயற்சிகள் ஈடுபட்டனர். அதற்கான வாய்ப்பு கிடைத்தும், கோல் அடிக்க முடியவில்லை. இறுதியால 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த வெற்றியுடன் பிரேசில் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Monday, November 28, 2022, 23:48 [IST]
Other articles published on Nov 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+