Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது!

கசான்: ரஷ்யாவில் நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மற்றொரு அதிர்ச்சியாக, 5 முறை சாம்பியனான பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம். இதன் மூலம் 2-வது முறையாக அரை இறுதிக்கு பெல்ஜியம் நுழைந்துள்ளது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன.

உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்றது. பெல்ஜியம் 2-1 என ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வென்றது. நாளை நடக்கும் ஆட்டங்களில் ரஷ்யா - குரேஷியா, ஸ்வீடன் - இங்கிலாந்து சந்திக்கின்றன.

பிரேசில் கடந்த வந்த பாதை

பிரேசில் கடந்த வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரேசில் 3ல் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்தில் குட்டி அணியான சுவிட்சர்லாந்துடன் 1-1 என டிரா செய்தது, கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 2-0 என மெக்சிகோவை வென்றது. 5 முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக காலிறுதியில் விளையாடுகிறது. இதுவரை 10 முறை அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.

பெல்ஜியம் கடந்து வந்த பாதை

பெல்ஜியம் கடந்து வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது.

மிரட்டலான ஆட்டம்

மிரட்டலான ஆட்டம்

தொடர்ந்து ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடும் பிரேசில், இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் அபாரமாக விளையாடியது. ஆனால் 13வது நிமிடத்தில் பெர்னான்டின்ஹோ சேம் சைடு கோலடிக்க பெல்ஜியம் முன்னிலை பெற்றது. அப்போது வேகமெடுக்க ஆரம்பித்தது பெல்ஜியம். குறிப்பாக லுகாகு மிரட்டலாக விளையாடி பிரேசிலின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினார். அவர் சூப்பராக பாஸ் செய்து கொடுத்த பந்தை, டி புருனே கோலடிக்க 31வது நிமிடத்தில் 2-0 என பெல்ஜியம் முன்னிலை பெற்றது. 76வது நிமிடத்தில் ரெனாடோ அகஸ்டோ கோலடிக்க, 2-1 என முன்னிலையை பிரேசில் குறைத்தது.

வெளியேறியது பிரேசில்

வெளியேறியது பிரேசில்

அதன்பிறகு கோலடிக்கும் வாய்ப்பை பிரேசிலுக்கு தராமல் தண்ணி காட்டியது பெல்ஜியம். ஆட்ட நேர இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று, முன்னாள் சாம்பியனான பிரேசிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது பெல்ஜியம். 1986ல் அரை இறுதிக்கு நுழைந்த பெல்ஜியம், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்து அசத்தியுள்ளது. அரை இறுதியில் பிரான்ஸை சந்திக்க உள்ளது.

Story first published: Saturday, July 7, 2018, 2:31 [IST]
Other articles published on Jul 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+