Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவிங்களா.. இப்படியெல்லாமா ஊழல் செய்வீங்க?

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கவுரமாகும்.

சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு ஒரு நாட்டில் தேவையான வசதிகள் உள்ளதா, வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து தான் போட்டியை நடத்தும் வாய்ப்பு தரப்படுகிறது.

Brazil bribed for Olympic


இதற்கு ஒலிம்பிக் கமிட்டிகளில் உள்ளவர்கள் ஓட்டுப் போட்டு ஆதரவு அளிக்க வேண்டும். கடைசியாக, 2016ல், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்தது, 2020ல் டோக்கியோவில் நடக்க உள்ளது.

ஒலிம்பிக் போட்டியை ரியோவில் நடத்துவதற்கு, ஒலிம்பிக் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லாமினே டியாக்குக்கு, 13 கோடி ரூபாய் லஞ்சம் அளித்துள்ளதாக ரியோ நகரின் முன்னாள் கவர்னர் செர்ஜியோ கேப்ராலிடம் பிரேசில் அரசு விசாரணை நடத்தி வருகிறது. பிரான்ஸ் நாடு நடத்தி வரும் விசாரணையின் அடிப்படையில் இந்த விசாரணையை பிரேசில் துவக்கியுள்ளது.
Story first published: Wednesday, September 6, 2017, 13:42 [IST]
Other articles published on Sep 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+