Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலககோப்பை 2026: பிரேசில் 41வது முறையாக படைத்த சாதனை.. முதல் அணியாக வெளியேறியது ஹைதி

பிலடெல்பியா: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் 'சி’ பிரிவு ஆட்டத்தில், பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணி என்ற பின்னடைவை ஹைட்டி சந்தித்துள்ளது.

முதல் ஆட்டத்தில் மொராக்கோ அணியுடன் டிரா செய்திருந்த பிரேசில் அணிக்கு, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் வீரர்கள் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தினர். பிரேசில் அணியின் மேத்யூஸ் குன்ஹா ஆட்டத்தின் 23 மற்றும் 36-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

Brazil players celebrating victory over Haiti

இதனைத் தொடர்ந்து, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (47-வது நிமிடம்) வினிசியஸ் ஜூனியர் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியிலேயே பிரேசில் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், ஆட்டம் அதே ஸ்கோருடன் நிறைவடைந்தது.

IND vs AFG: இந்திய அணி பிளேயிங் XI.. 3வது ஒருநாள் போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுங்க- ஆகாஷ் சோப்ரா

IND vs AFG: இந்திய அணி பிளேயிங் XI.. 3வது ஒருநாள் போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுங்க- ஆகாஷ் சோப்ரா

குரூப் 'சி’ புள்ளிகள் பட்டியல் நிலவரம்

இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி குரூப் 'சி’ பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மொராக்கோ அணி 1-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. மொராக்கோ அணியும் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், கோல் வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்று புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. ஜூன் 25 அன்று நடைபெறவுள்ள தனது அடுத்த ஆட்டத்தில் பிரேசில் அணி ஸ்காட்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

ரஃபின்ஹாவின் காயம் மற்றும் நெய்மர் இல்லாதது

பிரேசில் அணிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை அளித்தாலும், அணியின் முக்கிய விங்கரான ரஃபின்ஹாவின் காயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கால் காயம் காரணமாக 29 வயதான அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ராயன் களமிறக்கப்பட்டார். பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ரஃபின்ஹாவின் காயம், அடுத்தடுத்த போட்டிகளில் பிரேசில் அணிக்கு பெரும் கவலையாக அமையலாம். மேலும், நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் கால் தசை காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிவிவரங்கள் மற்றும் சாதனைகள்

உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசில் அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களைப் பதிவு செய்வது இது 41-வது முறையாகும். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் 3-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்த அணிகளின் வரிசையில் பிரேசில் தனது சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்போட்டியில் பிரேசில் அணி 60 சதவீத பந்து கட்டுப்பாட்டுடன், 90 சதவீத துல்லியமான பாஸ்களை வழங்கி முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

IND vs AFG: கம்பீரின் முடிவு ராகுலுக்கு நல்லதல்ல.. அணிக்கும் நல்லதல்ல.. ஸ்ரீகாந்த் கவலை

IND vs AFG: கம்பீரின் முடிவு ராகுலுக்கு நல்லதல்ல.. அணிக்கும் நல்லதல்ல.. ஸ்ரீகாந்த் கவலை

மறுபுறம், அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் உள்நாட்டுப் வன்முறைகள் காரணமாக சொந்த மண்ணில் போட்டிகளை நடத்த முடியாமல் தவித்து வரும் ஹைட்டி அணி, 1974-க்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், மாபெரும் கனவுடன் வந்து தற்போது தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Story first published: Saturday, June 20, 2026, 11:34 [IST]
Other articles published on Jun 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+