Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெனால்டி ஷூட் அவுட்டில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு சென்ற பிரேசில்: ரசிகர்கள் கொண்டாட்டம்

சா பாலோ: ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றில் பிரேசில் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்து சிலியை வீழ்த்தியதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாகவே நடப்பு சாம்பியனான ஸ்பெயின் முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.

இந்நிலையில் நாக் அவுட் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரேசில், சிலி

பிரேசில், சிலி

சனிக்கிழமை இரவு பிரேசில் மற்றும் சிலி அணிகள் மோதின. பெலோ ஹரிசான்டே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியை 25 ஆயிரம் பேர் கண்டு களித்தனர்.

பெனால்டி

பெனால்டி

ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் மற்றும் சிலி அணிகள் தலா ஒரு கோல் அடித்து சமமாக இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பெனால்டி ஷூட்அவுட்டில் என்ன நடக்குமோ என்று உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் பிரேசில் ரசிகர்கள் நகத்தை கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

பிரேசில் வெற்றி

பிரேசில் வெற்றி

பெனால்டி ஷூட்அவுட்டின் முடிவில் பிரேசில் 3 கோல்களும், சிலி 2 கோல்களும் அடித்திருந்தன. இதையடுத்து பிரேசில் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

பிரேசில் அணி போராடி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை வாத்தியங்களை வாசித்தும், கட்டிடங்களின் உயரத்தில் நின்று கொண்டு பிரேசில் பிரேசில் என்று கோஷமிட்டும் கொண்டாடினார்கள்.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

முன்னதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் நாக்அவுட் சுற்றில் பிரேசில் சிலியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா

கொலம்பியா

காலிறுதிப் போட்டியில் பிரேசில் கொலம்பியா அணியுடன் மோதுகிறது. நாக்அவுட் சுற்றில் கொலம்பியா உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Story first published: Sunday, June 29, 2014, 9:53 [IST]
Other articles published on Jun 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+