Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரை இறுதிக்குள் நுழையுமா பிரேசில்?: கொலம்பியாவுடன் நாளை மோதல்

ரியோடிஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி திருவிழா நாளை தொடங்குகிறது. காலிறுதிப் போட்டியின் 2வது இடத்தில் பிரேசில் மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தி வரும் பிரேசில் அணி இதுவரை 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்து சாம்பியனாகுமா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொலம்பியா கடும் சவாலா இருக்கும்?

கொலம்பியா கடும் சவாலா இருக்கும்?

பிரேசிலுக்கு கொலம்பியா கடும் சவாலாக விளங்கலாம். பிரேசில் அணி லீக் ஆட்டங்களில் குரோஷியாவை 3-1 என்ற கோல் கணக்கிலும், கேமரூனை 4-1 என்ற கோல் கணக்கிலும் வென்றது. மெக்சிகோவுடன் கோலின்றி ‘டிரா' செய்தது.

நெய்மர்தான் நம்பிக்கை.

நெய்மர்தான் நம்பிக்கை.

2-வது சுற்றில் சிலியை பெனால்டி ஷூட்டில் தான் வெல்ல முடிந்தது. பிரேசிலைப் பொறுத்தவரை நெய்மர்தான் நம்பிக்கை நட்சத்திரம்

கடந்த மாதிரி எதுவும்..

கடந்த மாதிரி எதுவும்..

கடந்த 2 உலக கோப்பையிலும் கால் இறுதியில் தோற்ற மோசமான வரலாறு பிரேசிலுக்கு இருக்கிறது. 2006-ம் ஆண்டு பிரான்சிடமும் 2010-ம் ஆண்டு நெதர்லாந்திடமும் பிரேசில் தோற்றது.

ஜேம்ஸ் ரோட்ரிக்

ஜேம்ஸ் ரோட்ரிக்

நடப்பு உலக கோப்பையில் கொலம்பியா மிகவும் அற்புதமாக ஆடி வருகிறது. அந்த அணியின் ஜேம்ஸ் ரோட்ரிக்கின் ஆட்டம்தான் முதன்மைக் காரணம்.

அதிர்ச்சி கொடுக்குமா கொலம்பியா?

அதிர்ச்சி கொடுக்குமா கொலம்பியா?

கொலம்பியா லீக் ஆட்டங்களில் கிரீசை 3-0 என்ற கணக்கிலும், ஐவேரி கோஸ்டை 2-1 என்ற கணக்கிலும், ஜப்பானை 4-1 என்ற கணக்கிலும் வென்றது. 2-வது சுற்றில் உருகுவேயை 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் முறையாக காலிறுதியில் விளையாடும் கொலம்பியா அணி பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்து அரை இறுதியில் நுழைந்து சாதனை படைக்குமா?

Story first published: Thursday, July 3, 2014, 14:21 [IST]
Other articles published on Jul 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+