Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வண்ணமயமாக விழாக்கோலம் பூண்டது பிரேசில்

ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இன்று தொடங்க உள்ள நிலையில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் வண்ணம் பூசப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன. குகூள் ஸ்ட்ரீட் வியூவில் பிரேசிலின் அழகை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து ஜுரம்

கால்பந்து ஜுரம்

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இன்று துவங்கி அடுத்தமாதம் 13ம்தேதி வரை நடைபெறுகின்றன. துவக்க ஆட்டத்திலேயே குரோஷியாவுடன், பிரேசில் விளையாட உள்ளதால் அந்த நாட்டில் கால்பந்து ஜுரம் ஏகத்துக்கும் எகிறிப்போயுள்ளது.

ரத்தம்.. சதை.. வெறி

ரத்தம்.. சதை.. வெறி

காணும் இடமெல்லாம் கால்பந்து சார்ந்த நிகழ்வுகள், கேட்கும் ஒலியெல்லாம் கால்பந்து குறித்த பேச்சுக்கள், கனவிலும் கோல்கம்பத்துக்குள் பிரேசில் வீரர் அடிக்கும் பந்து செல்லும் காட்சி என ரத்தம், சதை என அனைத்திலும் பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு கால்பந்து வெறி கலந்துபோயுள்ளது.

அரிய மூலிகைகளின் அமேசான்

அரிய மூலிகைகளின் அமேசான்

அமேசான் மழைக்காடுகளில் ஆரம்பித்து வடகிழக்கின் பரந்த கடல் பகுதிவரையிலான பிரேசிலின் ஒவ்வொரு பகுதியும் கால்பந்தாட்டத்தால் களைபெற்றுள்ளது. பல நாட்டு கலைஞர்களும் ரியோடி ஜெனிரோ, சாவ் பவுலோ, ரெசிபே, பீலோ ஹோரிசோன்ட் போன்ற முக்கிய நகரங்களில், வெளிநாட்டு ஓவியர்கள் குவிந்து பல வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். இதனால் பிரேசில் வண்ணக்கோலம் பூண்டுள்ளது.

வரைந்து தள்ளுகிறார்கள்

வரைந்து தள்ளுகிறார்கள்

தெருக்களில் பெயிண்ட் அடிப்பது பிரேசிலில் சட்டவிரோம். ஆனால் கால்பந்து திருவிழாவுக்காக அந்த விதிமுறைகள் மகிழ்ச்சியோடு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தங்கள் வீட்டு சுவற்றில் யாராவது வந்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தாலும், தடுப்பதற்கு யாரும் தயார் இல்லை.

கூகுள் தெரு வியூ

கூகுள் தெரு வியூ

உள்ளூர் டாக்சிகளில் பிரேசில் நாட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பூங்காக்களில் வண்ண பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. பொருளாதார தேக்கத்தில் சிக்கியிருந்த பிரேசிலுக்கு உலக கோப்பை கால்பந்து பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. கூகுள் தனது ஸ்டீட்வியூ சேவையில் பிரேசிலின் அழகை இணைத்துள்ளது.

Story first published: Thursday, June 12, 2014, 12:40 [IST]
Other articles published on Jun 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+