Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேசிலுக்கு 6வது உலகக்கோப்பை.. எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.. நெய்மாருக்கு ஆதரவாக வந்த ரொமாரியோ!

தோஹா: வெளி உலக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், நீங்கள் நீங்களாக இருங்கள் என்று நட்சத்திர வீரர் நெய்மாருக்கு பிரேசில் ஜாம்பவான் ரொமாரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

22வது உலகக்கோப்பை தொடர் நவ.20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்கவுள்ள நிலையில், கால்பந்து ஜுரம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. கேரளாவில் கால்பந்து உலகக்கோப்பையை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்களை இந்தியாவே திரும்பி பார்த்து வருகிறது.

உலகக்கோப்பை என்ற பெயரில் வெறும் 25 முதல் 30 அணிகளுக்கு மட்டும் போட்டியை நடத்தாமல், ஃபிபாவில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் உலகக்கோப்பையில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும். அதனால் தான் கால்பந்து உலகக்கோப்பைக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்படி இதுவரை நடத்தப்பட்ட 22 உலகக்கோப்பை தொடர்களில் 5 முறை உலகக்கோப்பை வென்ற அணி தான் பிரேசில்.

நெய்மார் சர்ச்சை

நெய்மார் சர்ச்சை

இந்த நிலையில் கத்தார் உலகக்கோப்பை வெல்வோம் என்ற நம்பிக்கையில் நெய்மார் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டேட்டஸை வைத்திருந்தார். அதில் 5 உலகக்கோப்பை வென்றதன் நினைவாக, 5 பிரேசில் ஜாம்பவான்களின் புகைப்படத்தை வைத்ததோடு, 6வது வீரராக நெய்மார் தன்னையும் சேர்த்திருந்தார். இதற்கு ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நெய்மாரின் செயல்பாடுகளையும் விமர்சித்து வருகின்றனர்.

நெய்மாருக்கு சவால்

நெய்மாருக்கு சவால்

பிரேசில் நாட்டில் தனிமனித வளர்ச்சியை விடவும், உலகக்கோப்பையை வென்று கொடுக்கும் வீரர்களுக்கு அதிக மரியாதை வழங்கப்படும். ஆனால் நட்சத்திர வீரர் நெய்மார் இதுவரை முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதில்லை. அதனால் பிரேசில் ரசிகர்கள் நெய்மாரை ஜாம்பவான் வீரர்களோடு ஒப்பிட மறுத்து வருகின்றனர்.

ரொமாரியோ ஆதரவு

ரொமாரியோ ஆதரவு

இந்த நிலையில் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு ஆதரவாக 1994ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் ரொமாரியோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நெய்மார், உங்களுக்கான தருணம் வந்து கொண்டிருக்கிறது. விமர்சனம் என்ற பெயரில் ஏராளமானோர் அவர்களின் சொந்த வேலையை விட்டு, கால்பந்து பற்றியும், வீரர்களின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகமான ஆலோசனை வழங்குவார்கள்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

1993ம் ஆண்டு வரை என் மீதும் இப்படியான விமர்சனங்கள் வந்தது. ஆனால் அவர்களின் ஆலோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இந்த நிலையில் நான் இன்று இருந்திருக்க மாட்டேன். நெய்மாரிடம் இருப்பது ஆணவமல்ல. அதுதான் அவரின் நம்பிக்கை. நீங்கள் நீங்களாக இருங்கள். டிவி முன் இருப்போருக்கு வேண்டுமானால் நல்லவன் என்ற வார்த்தை தேவையாக இருக்கலாம். ஆனால் உச்சபட்ச திறமையை வெளிபடுத்த வேண்டிய தொடரில், யாராலும் தவறுகளை ஏற்க முடியாது.

நம்பிக்கை

நம்பிக்கை

நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது என் இதயம் அமைதியாக இருக்கிறது. அணிக்கு எப்போது தேவையோ, அப்போது செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களை நானும், பிரேசில் மக்களும் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தக் கடிதம் நெய்மார் மற்றும் பிரேசில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, November 22, 2022, 15:56 [IST]
Other articles published on Nov 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+