For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் வெற்றியை பதிவு செய்யுமா பிரேசில்... கோஸ்டாரிகாவுடன் இன்று மோதுகிறது!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை சந்திக்கிறது பிரேசில்.

Recommended Video

வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பிரேசில்...சமாளிக்குமா கோஸ்டாரிகா- வீடியோ
Brazil to meet coasta rica in the fifa world cup

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை சந்திக்கிறது முன்னாள் சாம்பியன் பிரேசில்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ் ஆகிய மூன்று அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பிரேசில், கோஸ்டாரிகா விளையாடுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து விளையாடுகின்றன.
----
பிரிவு இ
பிரேசில் - கோஸ்டாரிகா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
இ பிரிவில் இதுவரை...

* செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.
* பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது.

இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் செர்பியா 3 புள்ளிகளுடன் டாப்பில் உள்ளது. பிரேசில், சுவிட்சர்லாந்து தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோஸ்டாரிகா கணக்கை துவக்கவில்லை.
-----
இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா மற்றும் கோஸ்டாரிகா மோதின. இதில் கோஸ்டாரிகாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோலரோவ் அபாரமாக கோலடித்து, கோஸ்டாரிகா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 1-0 என வென்று செர்பியா 3 புள்ளிகளைப் பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது.

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உண்டு. உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றிருந்தது.

அந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

அந்த ஆட்டத்தில் உலகின் காஸ்ட்லி வீரரான பிரேசிலின் நெய்மர் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார்.

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோஸ்டாரிகா அணி எந்த அணிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாகும். கடந்த உலகக் கோப்பையில் மூன்று முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து அணிகளுடன் கோஸ்டாரிகா இடம்பெற்றது. பிரிவு சுற்றில் கடைசி இடம்தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தாலி, உருகுவேயை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தில் பிடித்த கோஸ்டாரிகா காலிறுதியில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை பிரேசில் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்துடன் விளையாடுகிறது.

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பதை இன்றைய ஆட்டங்கள் முடிவு செய்யும். அதனால், முதல் ஆட்டத்தைப் போல் மெத்தனமாக விளையாடினால், நெய்மர் கோல் அடித்து உதவாவிட்டால், பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலைக்கு பிரேசில் தள்ளப்படும்.

Story first published: Friday, June 22, 2018, 1:14 [IST]
Other articles published on Jun 22, 2018
English summary
Brazil to meet costa rica in the group e match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+