Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெய்மர் கோல்ல்ல்... மெக்சிகோவுக்கு எதிராக 2-0 என வெற்றி... காலிறுதியில் பிரேசில்!

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில், மெக்சிகோ சந்தித்தன. முதல் பாதி 0-0 என முடிவடைந்த நிலையில், 51வது நிமிடத்தில் நெய்மர் அபாரமாக கோலடிக்க 1-0 என பிரேசில் முன்னிலை பெற்றது. 88வது நிமிடத்தில் ராபர்டோ பிர்மினோ கோலடிக்க 2-0 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன.

காலிறுதிக்கு முன்னேறின

காலிறுதிக்கு முன்னேறின

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று ரஷ்யா காலிறுதி நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

பிரேசிலின் சாதனை

பிரேசிலின் சாதனை

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பைகளிலும் பங்கேற்றுள்ள ஒரே அணி பிரேசில். மேலும் 5 முறை கோப்பையை வென்று அதிக முறை வென்ற அணியாக உள்ளது. 2வது இடம், 3வது இடம், நான்காவது இடத்தை தலா 2 முறை பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் மிகவும் வலுவான அணியாக பிரேசில் திகழ்கிறது. மெக்சிகோ இதுவரை 15 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளது. கடைசியாக 1986ல் காலிறுதி நுழைந்தது. 1994 முதல் தொடர்ந்து 6 முறை நாக் அவுட் சுற்றில் வெளியேறியுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி நுழையும் முயற்சியில் உள்ளது.

நெய்மருக்கு வாய்ப்பு

நெய்மருக்கு வாய்ப்பு

இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, எகிப்தியின் சலா ஆகியோர் ஏமாற்றினர். அந்த அணிகள் வெளியேறின. கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்கள் அடித்தார். ஆனாலும், போர்ச்சுகல் நாக் அவுட்டில் வெளியேறியது. கடந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்த பிரேசிலின் நெய்மர் இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தார். அவர் அதிக கோல்களை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

காலிறுதியில் பிரேசில்

காலிறுதியில் பிரேசில்

இன்று நடந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இரு அணிகளும் மிகவும் வலுவாக மோதின. சமபலத்துடன் மோதினாலும், பிரேசிலுக்கு கோலடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 51வது நிமிடத்தில் நெய்மர் அபாரமாக கோலடித்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ராபர்டோ பிர்மினோ கோலடிக்க 2-0 என வென்று 16வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது பிரேசில்.

Story first published: Monday, July 2, 2018, 23:03 [IST]
Other articles published on Jul 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+