Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெய்மர் உதவியால் செர்பியாவை பிரேசில் வென்றது... நாக் அவுட் நுழைந்தது!

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த இ பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிரேசில் முன்னேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில், செர்பியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா மோதின.

பிரேசிலுக்கு அதிர்ச்சி

பிரேசிலுக்கு அதிர்ச்சி

இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது. முன்னாள் உலக சாம்பியனான பிரேசிலுக்கு முதல் ஆட்டத்திலேயே ஷாக் கிடைத்தது. சுவிட்சர்லாந்து 1-1 என டிரா செய்தது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது.

கோலடித்தார் நெய்மர்

கோலடித்தார் நெய்மர்

இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர்களில் ஒருவரான பிரேசிலின் நெய்மர், முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடித்தார். இன்றைய ஆட்டத்தில், அவர் கோலடித்து வெற்றியைத் தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நாக் அவுட் வாய்ப்பு

நாக் அவுட் வாய்ப்பு

இ பிரிவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று நடந்த செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தாலே பிரேசில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகாவை சந்திக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இதுரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ள அணி, 5 முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உள்ளது. 1994ல் இருந்து குறைந்தபட்சம் கால் இறுதியில் பிரேசில் விளையாடியுள்ளது. இதில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக உள்ள பிரேசில் 2-0 என செர்பியாவை வென்றது. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் பாலின்ஹோ முதல் கோலை அடித்தார். 68வது நிமிடத்தில் நெய்மர் கடத்தி வந்து உதவ, தியாகோ சில்வா அணியின் 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில் நுழைந்தது.

Story first published: Thursday, June 28, 2018, 1:40 [IST]
Other articles published on Jun 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+