For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபாவில் இன்று மோதல்... சுவிட்சர்லாந்தை கூலாக சந்திக்குமா பிரேசில்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பிரேசில் மோதுகிறது.

Brazil to meet switzerland in the fifa world cup

ரோஸ்தோன் ஆன்டான்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடன் முன்னாள் சாம்பியன் பிரேசில் மோதுகிறது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இ பிரிவில் நடக்கும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் ஐந்து முறை சாம்பியனான பிரேசில் விளையாட உள்ளது.
----
பிரிவு இ
பிரேசில் - சுவிட்சர்லாந்து
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி
----
உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றுள்ளது. 2ல் டிரா செய்துள்ளது. கடைசியாக 1934ல் ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியடைந்தது.

இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணியான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஸ்சர்தான் ஷாகிரி, கடந்த உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோலடித்த பெருமையைப் பெற்றுள்ளார். உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 10ல் 9ல் சுவிட்சர்லாந்து வென்றுள்ளது.
---
முக்கிய வீரர்கள்

பிரேசில் - வேறு யாராக இருக்க முடியும். நெய்மர்தான் பிரேசில் அணியின் முதுகெலும்பாக உள்ளார். எலும்பு முறிவு ஏற்பட்டு சில காலம் ஓய்வில் இருந்த அவர், இந்த உலகக் கோப்பையில் கவனிக்கப்படும் முக்கிய வீரராக உள்ளார்.

சுவிட்சர்லாந்து - ஸ்சர்தான் ஷாகிரி மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். உலகக் கோப்பையில் 50வது ஹாட்ரிக் கோல் அடித்த வீரராக அவர் உள்ளார்.
-----
கடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை பிரேசிலில் உள்ள சின்னக் குழந்தை கூட மறந்திருக்காது.

தற்போது புத்துயிர் பெற்றுள்ள பிரேசில் அணி, அந்தத் தோல்வியை மறந்து, ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் பங்கேற்றவர்களில் மார்செலோ, போலின்ஹோ, பெர்னான்டின்ஹோ, வில்லியான் ஆகியோர் தற்போதைய அணியில் உள்ளனர். காயம் காரணமாக அந்த அரை இறுதியில் விளையாடாத நெய்மர் தற்போது மேலும் வலுவுடன் உள்ளார்.

பிரேசிலுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து ஒரு சாதாரண அணியாக தெரியும். ஆனால், இதுவரை மூன்று முறை காலிறுதிக்கு நுழைந்துள்ள சுவிட்சர்லாந்து அணி, 11வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது, தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது சாதாரணமான விஷயமல்ல.

பிரேசிலுக்கு எதிரான ஆட்டம் என்பது சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை வந்தால் மலை, போனால் முடி என்பதுதான். இருந்தாலும் மலையை இழுக்க முயற்சிக்கும்.

Story first published: Sunday, June 17, 2018, 2:12 [IST]
Other articles published on Jun 17, 2018
English summary
Tough fight expected for brazil from switzerland in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+