சிலியிடம் போராடித் தப்பிய பிரேசில்… டிவிட்டரில் ஒரு சாதனை!
சாவோ பாலோ: சிலி அணியிடம் கடுமையாகப் போராடி கடைசியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றியைப் பறித்து காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரேசில் அணி குறித்த டிவிட்களை சரமாரியாக வெளியிட்டு டிவிட்டரில் சாதனை படைத்துள்ளனர் பிரேசில் ரசிகர்கள்.
சூப்பர் பவுல் போட்டிக்குக் கிடைத்ததை விட மிகப் பெரிய வரவேற்பை, சிலி - பிரேசில் போட்டி டிவிட்டரில் பெற்று சாதனை படைத்துள்ளதாம்.
அந்த அளவுக்கு இந்தப் போட்டி மிகப் பெரிய விறுவிறுப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம்.

நிமிடத்திற்கு 3,88,985 டிவிட்கள்
இந்தப் போட்டியின்போது நிமிடத்திற்கு 3 லட்சத்து 88 ஆயிரத்து 985 டிவிட்கள் குவிக்கப்பட்டுள்ளன.

சூப்பர் பவுலைத் தூக்கிச் சாப்பிட்ட சாதனை
இது சூப்பர் பவுல் எனப்படும் அமெரிக்க தேசிய கால்பந்து லீக் இறுதிப் போட்டிக்கு கிடைத்த 3 லட்சத்து 81 ஆயிரத்து 605 என்ற டிவிட்களை விட அதிகமாகும்.

சிலி மிஸ் செய்தபோது
தனது கடைசி பெனால்டி ஷூட் அவுட்டை சிலி மிஸ் செய்தபோதுதான் டிவிட்களின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்துள்ளது.

1.64 கோடி டிவிட்கள்
இந்தப் போட்டியின்போது மொத்தமாக 1.64 கோடி டிவிட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

டிவிட்டரில் பிரேசில்தான் ராஜா
டிவிட்டரின் உலகளாவிய சந்தையில் பிரேசிலுக்குத் தனி இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications