Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிநாட்டு ரசிகர்களைத் தேடித் தேடிப் போய் மனதைப் பறி கொடுத்த பிரேசில் பெண்கள்!

ரியோ டி ஜெனீரோ: இது பிரேசிலின் மறுபக்கம்.. அந்த நாட்டுப் பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், இந்த முறை போட்டியைக் கண்டு ரசித்ததை விட போட்டியைக் காண வந்த பல நாட்டு ஆண்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தார்களாம்.. நட்பு நாடியும், உறவைத் தேடியும்.

40 லட்சம் பேர் வசிக்கும் குட்டி நாடுதான் பிரேசில். இந்த நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். அதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

தங்களுக்கேற்ற ஆண்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் அந்த நாட்டுப் பெண்களுக்கு பெரும் கஷ்டமாகி விடுகிறதாம். இதனால் பல இளம் பெண்கள் ஜோடி கிடைக்காமல் சிங்கிளாகவே காலம் தள்ளும் நிலையும் உள்ளதாம்.

ஓ ரசிக்கும் சீமானே பார்...

ஓ ரசிக்கும் சீமானே பார்...

இந்த நிலையில்தான் வாராது வந்த மாமணியாக உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி வந்தது. இந்தப் போட்டியைக் காண வந்த வெளிநாட்டு ஆண் ரசிகர்களை பிரேசில் இளம் பெண்கள் சுற்றிச் சுற்றி வந்து நட்பு பாராட்டினார்களாம்.

டான்ஸ் கத்துக் கொடுக்கட்டா..

டான்ஸ் கத்துக் கொடுக்கட்டா..

பல பெண்கள், தங்களது பாரம்பரிய நடனமான சம்பா டான்ஸை வெளிநாட்டு ஆண் ரசிகர்களுக்குக் கற்றுக் கொடுத்து நட்பு பிடித்தார்களாம். அவர்களுடன் சேர்ந்து போட்டியை ரசித்தும், டின்னருக்குப் போயும் நட்பு பாராட்டினார்களாம்.

ஐரோப்பிய ரசிகர்கள் மீது மோகம்

ஐரோப்பிய ரசிகர்கள் மீது மோகம்

பல பிரேசில் பெண்களுக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மீதுதான் அதிக ஆர்வம் இருந்ததாம். குறிப்பாக இத்தாலி ரசிகர்களுக்குத்தான் பிரேசில் பெண்கள் மத்தியில் கிரேஸ் அதிகமாம்.

இளைஞர்கள் இல்லாத ரியோ

இளைஞர்கள் இல்லாத ரியோ

பிரேசில் நகரங்களிலேயே ரியோ டி ஜெனீரோவில்தான் இளைஞர்களுக்குப் பஞ்சம் அதிகமாம். இங்கு மனதுக்குப் பிடித்த இளைஞர்களைப் பிடிப்பது என்பது குதிரைக் கொம்பு என்கிறார்கள் "பாதிக்கப்பட்ட" பெண்கள்.

10 பேருக்கு 9 ஆண்தான்

10 பேருக்கு 9 ஆண்தான்

இந்த நகரில் 10 பெண்களுக்கு 9 ஆண்கள் என்ற அளவில்தான் மக்கள் தொகை விகிதாச்சாரம் உள்ளதாம். அமெரிக்காவின் நியூயார்க்கிலும் கூட இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க பார்த்தாலும் ஆண்கள்.. வாவ்!

எங்க பார்த்தாலும் ஆண்கள்.. வாவ்!

22 வயதான மொய்தின்ஹோ என்ற பெண் கூறுகையில், எங்கு பார்த்தாலும் கலர் கலராக, அழகழகாக ஆண்களைப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. அத்தனை பேரும் என்னைக் கவர்ந்து வருகின்றனர். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது அத்தனை பேருமே அழகுதான். இந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கடவுள் எங்களுக்குக் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன் என்று வெட்கப் புன்னகையைச் சிந்தி மகிழ்கிறார். இவருக்கு இத்தாலி பாய் பிரண்ட் கிடைத்து விட்டாராம்.

பலாத்காரங்களும் அதிகம்

பலாத்காரங்களும் அதிகம்

பிரேசில் பெண்களே ஆண் ரசிகர்களைத் தேடித் தேடிப் போன நிலையிலும் கூட ஆங்காங்கே பாலியல் பலாத்காரங்களும் கூட நடந்துள்ளனவாம். ஆனால் பாதிக்கப்பட்ட பிரேசில் பெண்கள் அதுகுறித்து புகார் தர விரும்பவில்லையாம்.

நல்ல பசங்கதான்

நல்ல பசங்கதான்

வெளிநாட்டு ரசிகர்கள் நல்லவர்கள். அழகாக மட்டுமல்ல அறிவாகவும் இருக்கிறார்கள். நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் பிரேசில் பெண்கள் பாராட்டுகிறார்கள்.

உடம்பை விட மனசுக்கு

உடம்பை விட மனசுக்கு

உடல் வலிமையைக் காட்டுவதை விட மனதுக்கு ஆறுதல் தரும் வகையில் பேசுகிறார்கள் என்பது பெரும்பாலான பெண்களின் பாராட்டுப் பத்திரமாக இருந்தது.

எங்காளுங்க முரட்டுப் பயலுக

எங்காளுங்க முரட்டுப் பயலுக

அதேசமயம், பிரேசில் ஆண்கள் தங்களது உடல் வலிமைக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். உடம்பைக் காட்டி மயக்க முயல்வார்கள். மனதைப் பார்க்க மாட்டார்கள். முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். அது எங்களைக் கவர்வதில்லை என்று ஒரு பிரேசில் பெண் கூறினார்.

ரசிகர்கள் விழா

ரசிகர்கள் விழா

ரியோ டி ஜெனீரோவின் புறநகர்ப்பகுதியில் ரசிகர்கள் கலந்து கொண்ட திருவிழாவும் கூட நடந்தது. இங்கு நிறைய பிரேசில் பெண்களை, கவர்ச்சிகரமாக காண முடிந்தது. பலருக்கு இங்கேயே நிறைய பேர் நட்பாக கிடைத்தனராம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான ஃபீலிங்....!

Story first published: Wednesday, July 16, 2014, 14:00 [IST]
Other articles published on Jul 16, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+