கோபா அமெரிக்காவை விட்டு உதைக்கப்பட்ட பிரேசில்.. பயிற்சியாளர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் துங்கா!
ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அணி, கோபா அமெரிக்காத் தொடரை விட்டு சீக்கிரமே வெளியேறியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தற்போது அணியின் பயிற்சியாளரான துங்கா நீக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் அணியின் ஒருங்கிணைப்பாளர் கில்மர் ரினால்டியும் நீக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் அணி கோபா அமெரிக்கா போட்டியில் சாதாரண பெரு அணியிடம் 0-1 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்று காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது. இது பிரேசில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்காவின் பதவி பறி போயுள்ளது. புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்னும் பிரேசில் நாட்டு கால்பந்து சங்கம் அறிவிக்கவில்லை.
- கோபா அமெரிக்கா வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் சுற்றுப் போட்டியுடன் பிரேசில் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
- 1985ம் ஆண்டுக்குப் பின்னர் பெருவிடம் பிரேசில் தோற்றதே இல்லை. அந்த சாதனை தற்போது பறி போய் விட்டது.
- பி பிரிவில் இடம் பெற்றிருந்த ஜாம்பவான் பிரேசில் அணியால் 3வது இடத்தையே பெற முடிந்தது.
- பி பிரிவில் முதலிடத்தில் பெருவும், 2வது இடத்தைப் பிடித்த ஈகுவடாரும் காலிறுதிக்குப் போய் விட்டன.
- 2014 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு துங்கா பிரேசில் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
- பிரேசில் அணியின் அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து தற்போது பதவியைப் பறி கொடுத்துள்ளார்.
- பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த முன்னாள் கேப்டன் துங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, June 15, 2016, 12:52 [IST]
Other articles published on Jun 15, 2016


Click it and Unblock the Notifications