For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் கோலடித்தார் நெய்மர்.. கோஸ்டாரிகாவை வென்றது பிரேசில்.. அடுத்தச் சுற்றுக்கு நுழைய சான்ஸ் உள்ளது!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என பிரேசில் வென்றது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசில் வென்றது. நெய்மர் முதல் கோலை அடித்தார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

Brazil wins against coasta rica in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகியவை அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் கடைசி நேரத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுவிட்சர்லாந்து விளையாடுகின்றன.
----
பிரிவு இ
பிரேசில் - கோஸ்டாரிகா
2 - 0
----
இ பிரிவில் இதுவரை...

* செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது.
* பிரேசில் 1-1 என சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது.
* பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது.

இ பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரேசில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. செர்பியா 3, சுவிட்சர்லாந்து 1 புள்ளியுடன் உள்ளன. கோஸ்டாரிகா கணக்கை துவக்கவில்லை. இரண்டு தோல்விகளை சந்தித்த கோஸ்டாரிகா முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.
-----
இ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா மற்றும் கோஸ்டாரிகா மோதின. இதில் கோஸ்டாரிகாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் கோலரோவ் அபாரமாக கோலடித்து, கோஸ்டாரிகா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 1-0 என வென்று செர்பியா 3 புள்ளிகளைப் பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் முன்னாள் சாம்பியனான பிரேசில் விளையாடியது. அந்த ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க, பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில், இ பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் பிரேசில் இன்று விளையாடியது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உண்டு. உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றிருந்தது.

இன்று நடந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தில், 91வது நிமிடத்தில் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

உலகின் காஸ்ட்லி வீரரான பிரேசிலின் நெய்மர் முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார். இந்த ஆட்டமும் அதுபோலவே முடிந்து விடுமோ என்று ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர். 97வது நிமிடத்தில் நெய்மர் கோல் அடிக்க, மைதானமே அதிர்ந்தது.

இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று பிரேசில் 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்தது. இன்றைய ஆட்டத்தில் பிரேசிலுக்கு கடைசி வரை தண்ணி காட்டிய கோஸ்டாரிகா அணி, இரண்டு தோல்விகளுடன் வெளியேறுகிறது.

இன்று நடக்கும் செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டத்தின் முடிவில், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பது தெரியவரும்.

Story first published: Friday, June 22, 2018, 22:30 [IST]
Other articles published on Jun 22, 2018
English summary
Brazil beats costa rica in the group e match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+