For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

‘வெட்கப்படுங்கள்’.. சொந்த நாட்டு வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்.. இங்கிலாந்தில் வெடிக்கும் கலவரம்!

லண்டன்: இங்கிலாந்து வீரர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் பஞ்சாயத்து பிரதமர் வரை சென்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.

யூரோ கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் இத்தாலியிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.\

இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன? இந்தியா - இலங்கை தொடரில் குழப்பம்.. விளையாட மறுத்து போர்க்கொடி தூக்கிய 5 வீரர்கள்.. காரணம் என்ன?

இதனால் சொந்த நாட்டு அணி வீரர்கள் என்றும் பாராமல் இங்கிலாந்து அணி வீரர்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் இனவெறி ரீதியாக சாடி இருந்தனர்.

தோல்வி

தோல்வி

இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனானது. இதனால் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்துவிட, மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகிய மூவரும் கோல் அடிக்க தவறிவிட்டனர். கோல் அடிக்க தவறிய மூவரும் வேறு இனப் பின்னணி கொண்டவர்கள் ஆகும்.

இனவெறி ட்வீட்கள்

இனவெறி ட்வீட்கள்

அவர்கள் 3 வீரர்களுமே கரிபீயன் தீவுகள், நைஜீரியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இடங்களில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். இதனை மனதில் பதித்து கொண்ட ரசிகர்கள் சிலர், இங்கிலாந்தை சேர்ந்த 2 வீரர்களுமே கோல் அடித்துவிட்டனர். ஆனால் வந்தேறிகள் 3 பேரால் தான் இங்கிலாந்து அணி தோற்றது என நிறம் மற்றும் பிறப்பிடும் குறித்து மோசமான விமர்சனங்களை செய்து வந்தனர்.

 போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

இந்த பதிவுகள் விளையாட்டு உலகில் பூதாகரமாக வெடித்துள்ளது. இவற்றிற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விளையாட்டு வீரர்களை கதாநாயகர்களாக கொண்டாடப்பட வேண்டுமே தவிர சமூகவலைதளங்களில் அவர்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை தெரிவிக்க கூடாது. இனவெறி கருத்துகளை தெரிவித்தவர்கள் தலைகுணிந்து வெட்கப்பட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இதே போல தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவரும், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெவின் பீட்டர்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதெல்லாம் அனைவரும் ஒரு தாய் மக்கள், நிற பாகுபாடு இல்லை என சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது ஒரே போட்டியில் அவை அனைத்தும் மாறிவிட்டதா என வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த கருத்துகளை பதிவிட்ட ரசிகர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 13, 2021, 11:27 [IST]
Other articles published on Jul 13, 2021
English summary
British PM Boris Johnson Tweets about Racial Abuse Of England's Euro 2020 Team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X