இசையில் அசத்திய பிடிஎஸ் நட்சத்திரம்.. கோலகலமாக தொடங்கிய உலகக்கோப்பை.. சிலிர்க்க வைத்த கலைநிகழ்ச்சி!
தோஹா: ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடக்க விழாவில் பிடிஎஸ் இசைக்குழுவின் ஜங் கூக்-ன் பாடல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.

மார்கன் ஃபிரிமேன்
அல்கோர் நகரில் உள்ள 60 அயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனை ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃபிரிமேன் தொகுத்து வழங்கி வருகினார். அவர் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புதன்மையை பற்றி பேசியது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

பிடிஎஸ் இசைக்குழு
இதன்பின்னர் சிவப்பு நிற ஆடையுடன் நடன கலைஞர்கள் களம் புகுந்து ஆட தொங்கிய போது, மைதானமே உற்சாகம் அடைந்தது. Please Dont take me home மற்றும் ole ole போன்ற பிரபல பாடல்கள் பின்னணியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து உலக புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழுவின் ஜங்கூக் ஆஃப் கே பாப் பாய் பாட தொங்கினார். அவருடன் கத்தார் பாடகர் ஃபகத் இணைந்தார்.

கொடிகள் அறிமுகம்
இதன்பின்னர் ரசிகர்களின் மொத்த கவனமும் மேடையில் இருந்த பாடகர்கள் மீது மடைமாறியது. அவர்களும் பாடலோடு நடனமாடி அசத்த, தொடக்க விழா சிறப்பாக தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளின் கொடிகளும் வித்தியாசமான முறையில் நடன கலைஞர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

கண்கவர் நிகழ்ச்சிகள்
இதனிடையே கத்தார் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. அதேபோல் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டன.


Click it and Unblock the Notifications