Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது இடத்தில் சென்னையின் எப்சி... மோஹுன் பகன் அணியுடன் மோதல்!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 42வது போட்டி இன்றைய தினம் சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

ஐஎஸ்எல் 2020 -21 புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளது.

இதேபோல இதுவரை மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஏடிகே மோஹுன் பகன் அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறும் உத்வேகத்தில் உள்ளது.

42வது போட்டி

42வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 42வது போட்டி இன்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 7வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி அணி 2வது இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் மோதவுள்ளது.

3வது வெற்றிக்கு தீவிரம்

3வது வெற்றிக்கு தீவிரம்

இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னையின் எப்சி தன்னுடைய 3வது வெற்றியை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இடம்பெற அந்த அணி தீவிரமாக உள்ளது.

குறைந்தது 2 கோல்கள்

குறைந்தது 2 கோல்கள்

இந்த திட்டத்தை செயல்படுத்த ஏடிகே மோஹுன் பகன் அணியை இன்றைய போட்டியில் வெற்றி கொள்வது மட்டுமின்றி 2 கோல்களையாவது அந்த அணி அடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனிடையே, இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள மோஹுன் பகன் அணி ஒரு தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.

பரபரப்பான போட்டி

பரபரப்பான போட்டி

இந்நிலையில் இன்றைய போட்டியை சோனி டென் நெட்வொர்க் மற்றும் சோனி லைவ்வில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கவுள்ளது. மிகுந்த பரபரப்பான ஆட்டத்தை இன்றைய போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, December 29, 2020, 22:07 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+