For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சாம்பியன்ஸ் லீக் : வளர்த்த கடாவால் தோற்ற பாரிஸ்.. ஒரே கோல் அடித்து பேயர்ன் முனிக் கோப்பை வென்றது!

சாம்பியன்ஸ் லீக் : வளர்த்த கடாவால் தோற்ற பாரிஸ்.. பேயர்ன் முனிக் கோப்பை வென்றது!

Recommended Video

IPL ஏலத்தில் Dhoni- ஐ கேட்ட Mumbai Indians.. விட்டுக்கொடுக்காத CSK

லிஸ்பான் : 2020 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பேயர்ன் முனிக் 1 - 0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Champions League 2020 final result : Bayern Munich beat PSG

இந்தப் போட்டியில் பேயர்ன் முனிக் அணியின் அந்த ஒரு கோலை அடித்தவர் கிங்ஸ்லே கோமன். அவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் அகாடமியில் கால்பந்து கற்றவர் என்பதும், அந்த அணிக்காக ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் அணியில் நெய்மர், கிலியன் பாப்பே போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்ததால் அந்த அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இது பாரிஸ் அணியில் முதல் இறுதிப் போட்டி என்பதால் பரபரப்பு இருந்தது.

எனினும், அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. நெய்மர், கிலியன் பாப்பே, ராபர்ட் லீவன்டோஸ்கி ஆகியோருக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், கோல் அடிக்கப்படவில்லை.

பவுண்டரி மழை பொழிந்த நைட் ரைடர்ஸ்.. மன்றோ, பிராவோ, பொல்லார்டு அதிரடி.. சரண்டர் ஆன பார்படோஸ்!பவுண்டரி மழை பொழிந்த நைட் ரைடர்ஸ்.. மன்றோ, பிராவோ, பொல்லார்டு அதிரடி.. சரண்டர் ஆன பார்படோஸ்!

போட்டியின் 59வது நிமிடத்தில் கோமன் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். பாரிஸ் அணிக்கு ஒரு முறை பெனால்ட்டி மறுக்கப்பட்டது. அது தவறாக மறுக்கப்பட்டதாக பாரிஸ் நினைத்தாலும், அந்த அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்று, கோப்பையையும் வென்று இருக்கிறது பேயர்ன் முனிக். அதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வரலாறு படைத்துள்ளது அந்த அணி.

Story first published: Monday, August 24, 2020, 10:24 [IST]
Other articles published on Aug 24, 2020
English summary
Champions League 2020 final result : Bayern Munich beat PSG 1 - 0 and clinched sixth Champions league title. Coman hit their only goal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X