Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவை பந்தாடுமா டோணியின் அணி

பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை சென்னையின் எப்சி நாளை சந்திக்கிறது. இதில் வென்று புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி மீண்டும் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., 2015ல் சாம்பியன் பட்டம் வென்றது.

Chance for Chennaiyin FC to top the table

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அதற்கடுத்த ஆட்டங்களில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், புனே சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கோல்கத்தாவின் ஏடிகே அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் சென்னையின் எப்சி வென்றது.

தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி என்ற நிலையில், மும்பை சிட்டி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

5 போட்டிளில் 3ல் வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னையில் எப்சி, நாளை நடக்கும் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு எப்சி அணியை சந்தி்க்கிறது

பெங்களுருவில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வென்றால், புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

Story first published: Saturday, December 16, 2017, 16:15 [IST]
Other articles published on Dec 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+