புனே சிட்டிக்கு எதிரான வெற்றியை மச்சான்கள் தொடர்வார்களா?
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி இரண்டு ஆட்டங்களில் கடைசி நேரத்தில் டிரா செய்ய எதிரணிகளுக்கு வாய்ப்பு கொடுத்ததால் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்த சென்னயின் எப்சி, புனே சிட்டி எதிரான ஆட்டத்தில் அந்த தவறை செய்யாது என்று எதிர்பார்க்கலாம்.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னையில் கடைசியாக நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் டெல்லி டைனமோ அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தபோதும், கடைசி நேரத்தில் கோலடித்து டிரா செய்ய எதிரணிக்கு வாய்ப்பு அளித்தது. இதனால், கூடுதல் புள்ளிகளை பெறும் வாய்ப்பை இழந்தது. பெங்களூரு எப்சி 18 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் புனே சிட்டி அணியுடன் கேப்டன் கூல் டோணியின் சூப்பர் மச்சான்ஸ்களான சென்னையின் எப்சி மோதுகிறது.
புனேயில் நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வென்ற சென்னையின் எப்சி, இன்றைய போட்டியில் வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Story first published: Saturday, January 13, 2018, 15:20 [IST]
Other articles published on Jan 13, 2018


Click it and Unblock the Notifications