For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. ஆனால் மெஸ்ஸி மாரடோனா ஆக முடியுமா....??

பெலோ ஹாரிஸாண்டே, பிரேசில்: 1986.. இதே ஜெர்மனி.. அதே அர்ஜென்டைனா அந்தப் பக்கம்.. ஆக்ரோஷ மோதல்.. அதிரடி ஆட்டம்.. கடைசியில் மாரடோனாவின் கால்களில் சிக்கி ஜெர்மனி சிதைந்தது.. ஜில்லென்று கோப்பை... அர்ஜென்டைனாவின் கையில்.. உயர்த்திப் பிடித்து முத்தம் கொடுத்து உயர்ந்து நின்றார் மாரடோனா... ரசிகர்கள் மனதில் கடவுளாய்!

இன்றும் அதே அர்ஜென்டைனா.. அதே ஜெர்மனி.. மாரடோனா இல்லை.. மெஸ்ஸி இருக்கிறார்.. ஆனால் இவர் மாரடோனா ஆவாரா.. அவரைப் போல உயர்வாரா.. இதுதான் மில்லியன் டாலர் கேள்வி...

இன்று மோதப் போகும் ஜெர்மனியும், அர்ஜென்டைனாவும் கோப்பைக்காக வெறி கொண்டு விளையாடப் போகின்றன. ரத்த வெறி பிடித்த காட்டேறி போல கோல் வெறி பிடித்த ஜெர்மனி பிரேசிலை தூக்கிப் பிடித்து மிதித்து விளையாடிய விதம், அர்ஜென்டைனா ரசிகர்களுக்கு சற்று கிலேசத்தைக் கொடுத்தாலும் கூட மெஸ்ஸி மேல் பாரத்தைப் போட்டு பலத்த படபடப்புடன் நகம் கடித்தபடி காத்திருக்கிறார்கள்.

இவர்களின் பதட்டத்தைத் துடைப்பாரா மெஸ்ஸி.. மாரடோனாவை மிஞ்சி உயர்ந்து நிற்பாரா.. இன்றைய போட்டியின் இறுதியில் தெரியும்.

ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாடு

ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாடு

மெஸ்ஸிக்கு 11 வயது இருக்கும்போது அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருந்தது தெரிய வந்தது.

இன்று இமாலயப் பொறுப்பை சுமந்தபடி

இன்று இமாலயப் பொறுப்பை சுமந்தபடி

சரியாக 16 ஆண்டுகள் கழித்து இன்று அர்ஜென்டைனா கால்பந்து ரசிகர்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் மாரடோனாவை மிஞ்சுவாரா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் நின்று கொண்டிருக்கிறார் அதே மெஸ்ஸி.

மாரடோனா மாதிரி வளர்வேனா டாக்டர்...?

மாரடோனா மாதிரி வளர்வேனா டாக்டர்...?

அன்று டாக்டரிடம் மெஸ்ஸி இப்படிக் கேட்டாராம்.. நான் மாரடோனா அளவுக்கு வளர்வேனா.. எனக்கு மாரடோனா என்றால் உயிர்... அதற்கு டாக்டர் கூறினாராம். கவலையே படாதே.. நீ மாரடோனாவை விட பெரிய உயரத்திற்குப் போவாய் ...

4 செ.மீ ஜாஸ்திதான்

4 செ.மீ ஜாஸ்திதான்

தற்போது மாரடோனாவை விட உயரத்தில் 4 செமீ மெஸ்ஸி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறார். அதாவது உயரத்தில் மாரடோனாவை அவர் மிஞ்சி விட்டார். அடுத்து மாரடோனாவின் புகழை அவர் பீட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது அவர் இன்று தனது அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தால், அதுவும் அவரே கோல்களையும் போட்டு அதிரடியாக ஆடி வென்று கொடுத்தால் சாத்தியமாகும்.

3வது கோப்பை சாத்தியமா...?

3வது கோப்பை சாத்தியமா...?

இன்று அர்ஜென்டைனா கோப்பையை வென்றால் அது அந்த அணிக்கு 3வது உலகக் கோப்பையாகும்.

வரலாறு காணாத வீரர்

வரலாறு காணாத வீரர்

கால்பந்து உலகம் கண்டிராத சிறப்பான வீரர் மெஸ்ஸி என்று பலரும் புகழாரம் சூட்டுகிறார்கள். இதுவரை இருந்த வீரர்களை விட மெஸ்ஸிதான் பெஸ்ட் என்று சொல்வோரும் உண்டு.

மெஸ்ஸி பெஸ்ட்தான்.. ஆனால் மாரடோனா கடவுளாச்சே!

மெஸ்ஸி பெஸ்ட்தான்.. ஆனால் மாரடோனா கடவுளாச்சே!

ஆனால் அர்ஜென்டைனா ரசிகர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் கிட்டத்தட்ட சச்சன் ரசிகர்களைப் போல. அதாவது மாரடோனாவைக் கடவுளாக காண்பவர்கள் அர்ஜென்டைனா ரசிகர்கள். மெஸ்ஸியை இன்னும் கடவுள் இடத்திற்குக் கொண்டு வர அவர்கள் விரும்பவில்லை. என்னதான் மெஸ்ஸி சிறந்த வீரராக இருந்தாலும், மாரடோனா கடவுளாச்சே என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.

கடவுளைத் தோற்கடிக்க வேண்டுமானால்

கடவுளைத் தோற்கடிக்க வேண்டுமானால்

ஆனால் இன்று மெஸ்ஸி அசகாயசூரராக மாறி சாகசங்கள் புரிந்து கோல் மழை பொழிவதோடு கோப்பையையும் வென்று கொடுத்தால் அவருக்கும் கடவுள் பதவி கிடைக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.

சாதனைகள் ஏராளம்

சாதனைகள் ஏராளம்

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 3 முறை ஐக்கிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 6 முறை லா லிகா பட்டத்தை வென்றுள்ளார். 2 முறை ஸ்பானிஷ் கோப்பையை வென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் ஆண்டின் சிறந்த வீரராக 4 முறை தேர்வாகி சாதனையும் படைத்தவர்.

ஆனால் அர்ஜென்டைனாவுக்காக...

ஆனால் அர்ஜென்டைனாவுக்காக...

ஆனால் கிளப் அளவில் சூப்பராக ஆடும் மெஸ்ஸி, அர்ஜென்டைனா அணிக்காக சரியாக ஆடுவதில்லை என்ற குறை ரொம்ப நாளாகவே இருப்பதுண்டு. ஆனால் மாரடோனா அப்படி இல்லை. அவர் அர்ஜென்டைனா அணிக்காக பிரமாதமாக ஆடிக் கலக்கியவர். 1986ல் ஜெர்மனியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதில் மாரடோனாவின் பங்கு மகத்தானத.

கோல் மழை பொழியாதவர்

கோல் மழை பொழியாதவர்

கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் மெஸ்ஸி பெரியஅளவில் கோல்கள் போடாதவர். இதனால்தான் அவரை மாரடோனாவுடன் ஒப்பிட பலரும் தயங்குகிறார்கள். யோசிக்கிறார்கள், மறுக்கிறார்கள்.

ஆனால் மாரடோனா

ஆனால் மாரடோனா

1986ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது முதல் போட்டியிலிருந்து கோப்பையை பெறும் வரை மாரடோனா ஆடிய ஆட்டம், ஓடிய ஓட்டம்.. கோல்கள் போட்ட விதம்.. பந்துகளைப் பாஸ் செய்த விதம்.. இன்னும் அப்படியே மனக் கண்களில் நிழலாடி வருகிறது. அப்படி ஒரு புயல் போல அந்தத் தொடரைக் கலக்கியவர் மாரடோனா.

'பொடிப் பையன்'

'பொடிப் பையன்'

1986ல் அர்ஜென்டைனா கோப்பையை வென்றபோது மாரடோனாவுக்கு வயது 25தான். ஆனால் தற்போது மெஸ்ஸிக்கு 27 வயதாகிறது.

ஒப்பிடவே முடியாது

ஒப்பிடவே முடியாது

பழம் பெரும் வீரர்கள் முதல் பலரும் வரை மாரடோனாவுடன் மெஸ்ஸியை ஒப்பிடக் கூடாது. அது நியாயமே அல்ல என்கிறார்கள். காரணம், மாரடோனா பெரும் ஜாம்பவான். ஆனால் மெஸ்ஸி அப்படி அல்ல. அதேசமயம், அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் நிச்சயம் அவர் மாரடோனா அல்ல என்பது இவர்களின் வாதமாகும்.

'அப்பீட்டா'.. இல்லை 'ரீப்பீட்டா'....??

'அப்பீட்டா'.. இல்லை 'ரீப்பீட்டா'....??

1986ல் நடந்த மோதலின் ஜெராக்ஸ் ஆக இன்றைய போட்டியும் அமையுமா, அர்ஜென்டைனா 1986 முடிவை 'ரிப்பீட்' செய்து கோப்பையை வெல்லுமா அல்லது ஜெர்மனியிடம் சுருண்டு 'அப்பீட்' ஆகுமா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.!

Story first published: Sunday, July 13, 2014, 16:36 [IST]
Other articles published on Jul 13, 2014
English summary
There are chance for Lionel Messi to grow 'taller' than Diego Maradona if he wins the WC for his team in today's final with Germany.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+