Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மச்சான்" வெற்றியை தடுத்து நிறுத்தி மும்பை சிட்டி சுக்கா ரொட்டி!

மும்பை: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்சி வென்றது. இதன் மூலம் சென்னையின் எப்சியின் தொடர் வெற்றிக்கு பிரேக் போட்டது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.

Chennaiyin FC beaten


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அதற்கடுத்த ஆட்டங்களில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், புனே சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கோல்கத்தாவின் ஏடிகே அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் சென்னையின் எப்சி வென்றது.

தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி என்ற நிலையில், மும்பை சிட்டி அணியுடன் நேற்று விளையாடியது. இதற்கு முன், இரு அணிகளும் மோதிய 6 ஆட்டங்களில் கடைசி 4 ஆட்டங்களில் சென்னையில் எப்சி வென்றுள்ளது. அதனால் மெத்தனப் போக்குடன் விளையாடியது. அதன் விளைவு 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்சி வென்றது.

5 போட்டிளில் 3ல் வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் சென்னையில் எப்சி உள்ளது. வரும் 17ம் தேதி நடக்கும் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணியை சந்திக்கிறது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என ஜாம்ஷெட்பூர் அணியை வென்றது.
Story first published: Monday, December 11, 2017, 17:26 [IST]
Other articles published on Dec 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+