ஜீஜேவுக்கு ஜேஜே… பைனல்ஸில் சென்னையின் எப்சி

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் எப்சி கோவாவை வென்று, பைனல்ஸ்க்கு நுழைந்தது நம்ம தல கேப்டன் கூல் டோணியின் சூப்பர் மச்சான்களான சென்னையின் எப்சி.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் பைனல்ஸ்க்கு பெங்களூரு எப்சி அணி ஏற்கனவே முன்னேறியுள்ளது. மற்றொரு அரை இறுதியில், சென்னையின் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. கோவாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரண்டாவது ஆட்டம் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இந்த ஆட்டத்தில் 3-0 என்று கோல் அடித்து சென்னையின் எப்சி வென்றது. முதல் ஆட்டத்தையும் சேர்த்து 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று, இரண்டாவது முறையாக பைன்ல்ஸ்க்கு தகுதி பெற்றுள்ளது சென்னையின் எப்சி.

அதிரடியை தொடர்ந்த கோஹ்லி அணி

அதிரடியை தொடர்ந்த கோஹ்லி அணி

அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்தத் தொடரில் கலக்கி வந்த விராட் கோஹ்லியின் எப்சி கோவா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் போலவே, நேற்றைய ஆட்டத்திலும் துவக்கத்தில் இருந்தே தடுப்பாட்டத்தில் சென்னையின் எப்சி ஈடுபட்டது.

14 கார்னர் வாய்ப்புகள்

14 கார்னர் வாய்ப்புகள்

63 சதவீத நேரம், பந்து எப்சி கோவா அணியிடமே இருந்தது என்பதில் இருந்து எந்த அளவுக்கு இந்த ஆட்டத்தில் அந்த அணி ஆக்கிரமித்திருந்தது என்பது தெரியும். அந்த அணிக்கு 14 கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதே நேரத்தில் சென்னையின் எப்சிக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது.

குலுங்கியது மைதானம்

குலுங்கியது மைதானம்

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் பைனல்ஸ் போகும் வாய்ப்பு என்பதால், இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. எப்சி கோவா அதிரடி காட்டியபோது, சென்னையின் எப்சி தடுப்பாட்டத்தில் அசத்தியது. சென்னையின் எப்சியின் சூப்பர் ஸ்டார் ஜீஜே லால்பேகுலா, 26வது நிமிடத்தில் கோலடிக்க, நேரு ஸ்டேடியமே குலுங்கியது.

தனபால் கணேஷ் அசத்தல்

தனபால் கணேஷ் அசத்தல்

சேம் சைடு கோல் உள்பட, எப்சி கோவாவுக்கு கோலடிக்க பல வாய்ப்புகள் உருவாயின. ஆனால், அதை சென்னையின் எப்சி தடுத்தது. ஆட்டத்தின், 29வது நிமிடத்தில் தங்கத் தமிழன் தனபால் கணேஷ் கோலடிக்க, சென்னையின் எப்சி 2-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜீஜே மற்றொரு கோலடிக்க, மைதனமே, ஜே ஜே என்று கொண்டாடியது.

மீண்டும் சாம்பியனாகுமா சென்னையின் எப்சி

மீண்டும் சாம்பியனாகுமா சென்னையின் எப்சி

இந்த வெற்றியின் மூலம், இரண்டாவது முறையாக, ஐஎஸ்எல் பைனல்ஸ் விளையாடும் வாய்ப்பு சென்னையின் எப்சிக்கு கிடைத்துள்ளது. முதல் மற்றும் மூன்றாவது சீசனில், ஏடிகே சாம்பியனானது. 2015ல் நடந்த இரண்டாவது சீசனில் சென்னையின் எப்சி, எப்சி கோவாவை வென்று சாம்பியனானது.

வரும் 17ம் பெங்களூருவில் நடக்கும் பைனல்ஸ் போட்டியில் பெங்களூரு எப்சி அணியுடன், சென்னையின் எப்சி மோத உள்ளது.

Story first published: Wednesday, March 14, 2018, 14:22 [IST]
Other articles published on Mar 14, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற