விட்டதைப் பிடிக்குமா டோணியின் அணி!
சென்னை: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வியடைந்த நிலையில், நாளை நடக்கும் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை சென்னையின் எப்சி. சந்திக்கிறது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் துவங்கியுள்ளது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.

ஐஎல்எஸ் போட்டிகளில், சென்னை அணி 47 போட்டிகளில் 79 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த அணியாக உள்ளது. அதேபோல் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் கோல்கத்தாவும், சென்னையும் முதலிடத்தில் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், சென்னையில் நாளை நடக்கும் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியைச் சந்திக்க உள்ளது. அந்த அணி ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது.
தற்போதைக்கு புள்ளிப் பட்டியலில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி 5வது இடத்திலும், சென்னையின் எப்சி 9வது இடத்திலும் உள்ளன. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எப்சி முதலிடத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் சென்னையின் எப்சி வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர். நாளைய போட்டியில், இந்த சீசனில் முதல் வெற்றி என்ற இலக்குடன் இரு அணிகளும் விளையாட உள்ளன. அதனால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அடுத்ததாக டிசம்பர் 3ல் புனே அணியை சந்திக்க உள்ளது சென்னையின் எப்சி
Story first published: Wednesday, November 22, 2017, 17:25 [IST]
Other articles published on Nov 22, 2017


Click it and Unblock the Notifications