For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி டெல்லி அசத்தல் வெற்றி

By Karthikeyan

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கணக்கில் டெல்லி அணி வீழ்த்தியது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதின.

Chennaiyin FC thrashed at home by Delhi Dynamos

சென்னை ஜவகர்ஹால் நேரு விளையாட்டரங்கில் நேற்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் டெல்லி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மார்சிலெனோ கோலாக்கினார். இதையடுத்து 32வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஒமாக்பெமி பதில் கோலை அடித்தார்.

அடுத்த 2 நிமிடத்திலேயே மீண்டும் ஒரு கோலை அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மார்சிலெனோ. முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2வது பாதி ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் டெல்லி அணியின் பட்ஜி கோல் அடித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் டெல்லி டைனமோஸ் அணி வெற்றி பெற்றது.

Story first published: Friday, October 7, 2016, 1:19 [IST]
Other articles published on Oct 7, 2016
English summary
Delhi Dynamos have won against Chennaiyin FC away for the first time in ISL history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X