Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.எஸ்.எல் கால்பந்து ஆட்டத்தில் புனேவை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை!

சென்னை: ஐ.எஸ்.எல் ஆட்டத்தில் இன்று, புனே அணியை, சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.

சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்னை-புனே அணிகள் மோதின.

isl

34வது நிமிடத்தில் சென்னை வீரர், பெர்னார்டு மெண்டி, கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் புனே அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயன்றனர். அதை சென்னை வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். 48வது நிமிடத்தில் சென்னை வீரர் மென்டோசா வேலன்சியா கோல் போட்டார்.

பெரும் முயற்சிக்கு பிறகு 75வது நிமிடத்தில் புனே வீரர், கலு உச்சே கோல் அடித்தார். சக வீரர், தர்மராஜ் ராவணன் இதற்கு உதவி செய்தார்.

அதன்பின்னர் ஆட்டநேரம் முடியும் வரை இரு தரப்பிலும் கோல் பதிவு செய்யப்படவில்லை. எனவே, சென்னை அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஐ.எஸ்.எல் தொடரில், சென்னை அணியின் 3வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சென்னை அணி 2வது இடத்திற்கு முன்னேறியது.

Story first published: Saturday, October 24, 2015, 23:40 [IST]
Other articles published on Oct 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+