சாம்பியன் என நிரூபிக்கணுமே.. முதல் வெற்றி கிடைக்குமா சென்னை மச்சான்ஸ்?
சென்னை : சென்னையின் எஃப்சி அணி இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் ஒரு புள்ளி கூட எடுக்காத நிலையில், அந்த அணி வீரர்கள் மீது பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அதிக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே கூறவேண்டும்.
ஹீரோ இந்தியன் ஐஎஸ்எல் போட்டிகளின் 5 ஆவது சீசனில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாத சென்னை அணி வியாழக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
இந்த சீசனில், இன்னும் வெற்றியை ருசிக்காத சென்னை அணியை பிரிட்டன் பயிற்சியாளரான ஜான் கிரிகோரி, தனது பயிற்சி நுணுக்கங்கள் மூலம், வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜான் கிரிகோரி நம்பிக்கை
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, "நார்த் ஈஸ்ட் அணி இந்த சீசனில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இது அந்த அணி மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மற்றும் கோவா அணியை நார்த் ஈஸ்ட் அணி ஏற்கனவே வென்றுள்ளது. ஆனால் இந்த முறை அந்த அணியை சென்னை அணி வீரர்கள் வென்று காட்டுவார்கள் என நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.

வலுவான நார்த் ஈஸ்ட் அணி
பெங்களூருவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கோவா 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதே போல் நார்த் ஈஸ்ட் அணி அதன் பயிற்சியாளர் எல்கோ ஸ்காட்டரியின் சீரான பயிற்சியால் வலுவான நிலையில் உள்ளது. முன்னாள் பிஎஸ்ஜி அணியின் பாம்லோமியின் தடுப்பாட்டம் சென்னை அணிக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி சிறந்தது
ஐஎஸ்எல் போட்டிகளில் நாங்கள் எதிர்த்து விளையாடிய அணிகளில் சென்னை அணி சிறந்தது என்றும், ஆனால் அந்த அணியின் சில குறைபாடுகளை எங்கள் அணியின் வெற்றிக்கு உதவும் என்றும் டச்சு பயிற்சியாளர் எல்கோ ஸ்காட்டரி தெரிவித்துள்ளார். தங்கள் அணியின் நேருக்கு நேர் மோதும் ஸ்டைல் கோவா அணிக்கு எதிராக 2 - 2 என்று புள்ளியை எடுத்துத் தந்தது என்பதை ஸ்காட்டரி பார்த்திருக்கிறார். இதே போல் சென்னை அணிக்கு எதிராகவும் தங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.

சென்னை அணியில் மாற்றம் இருக்குமா?
காயமடைந்த தனபால் கணேஷ் அணியில் இல்லாத நிலையில் இதுவரை இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகு மிட்ஃபீல்டில் இருந்து சிறந்த சேவையைப் பெறும் ஸ்ட்ரைக்கர் ஜென்னி மற்றும் லல்பேகுவாவை சென்னை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதே போல் அனிருத் தாபா மற்றும் பிரீத் சிங் ஆகியோர் மிட்ஃபீல்டுக்கு முன்னேறவும், ரபேல் அகஸ்டோவின் தாக்குதலை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று கூறிய கிரிகோரி இந்த முறை வெற்றியை எட்ட வேண்டும் என உறுதியாக உள்ளார்.
சென்னை அணி இந்த சீசனின் முதல் வெற்றியை கண்டிப்பாக ருசிக்கும் என நம்பிக்கை இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications