Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக மக்களை வியக்கவைத்த ரொனால்டோ.. இன்ஸ்டாகிராமில் இமாலய சாதனை.. கோலியின் நிலைமையை பாருங்கள்!

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்னும் முதல் போட்டியில் கூட கிறிஸ்டியான ரொனால்டோ விளையாடாத சூழலில் பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக பார்க்கப்படும், ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறை கத்தாரில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளான நேற்று கத்தார் அணியை ஈக்குவடார் அணி 2 - 0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அசத்திய நிலையில் இன்று இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட அணிகள் மோதும் 3 போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து

என்னதான் மற்ற அணிகளின் விளையாட்டை பார்த்தாலும், கால்பந்து என்ற உடனேயே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரது ஆட்டத்தை பார்ப்பதற்கு தான். ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி H குரூப்பிலும், லியோனல் மெஸ்ஸி விளையாடும் அர்ஜெண்டினா அணி C குரூப்பிலும் விளையாடுகின்றனர்.

ரொனால்டோ சாதனை

ரொனால்டோ சாதனை

இந்நிலையில் ரொனால்டோவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு விஷயம் உலக கால்பந்து ரசிகர்களையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் யார் என்ற போட்டி மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடையே இருக்கும். அதற்கு தீனி போடும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு சாதனை செய்யப்பட்டுள்ளது.

அப்படி என்ன சாதனை

அப்படி என்ன சாதனை

அதாவது கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 50 கோடி பேர் பின் தொடரும் நபராக சாதனை படைத்துள்ளார். உலகில் அதிகம் பின் தொடரப்படும் நபர்களின் பட்டியலில் இவர் தான் முதலிடமாகும். சரியாக சொல்லப்போனால் உலக மக்கள் தொகையில் 10% சதவீதம் பேர் அவரை பின் தொடர்கின்றனர். உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை மிகவும் பின் தங்கியிருந்த அவர், முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாகவே மலமலவென உயர்ந்து 50 கோடியை எட்டியது.

கோலியின் நிலை

கோலியின் நிலை

இந்த பட்டியலில் லியோனல் மெஸ்ஸி, 372 மில்லியன் ஃபாலோவர்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். அதாவது 37 கோடி நபர்கள் ஆகும். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 224 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இவரை விட ரொனால்டோ இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 21, 2022, 21:05 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+