For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னை மன்னித்து விடுங்கள்.. 2 ஆண்டுகள் முன் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பெப் கார்டியோலா

By Stats Perform

மான்செஸ்டர் : கத்தார் உலகக் கோப்பைக்கு பின் கால்வின் பிலிப்ஸ் அதிக எடையுடன் இருந்ததாக பேசியதற்கு மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். 2022இல் கால்வின் பிலிப்ஸ் பற்றி ஊடகங்களிடம் பேசியதற்கு இப்போது மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அவர்.

டிசம்பர் 2022இல் செய்தியாளர் கூட்டத்தில் லிவர்பூலுக்கு எதிரான கராபோ கோப்பை போட்டியில் இருந்து கால்வினை நீக்கி விட்டு, அது குறித்து கார்டியோலா இந்த கருத்தை தெரிவித்து இருந்தார்.

City boss Pep Guardiola apologises to Kalvin Phillips for ‘overweight’ comment

கடந்த மாதம் வெஸ்ட் ஹாம் அணியில் சேர்ந்த கால்வின் பிலிப்ஸ், இம்மாத தொடக்கத்தில் அளித்த பேட்டியில், "உலகக் கோப்பைக்குப் பிறகு, பெப் நான் அதிக எடையுடன் இருப்பதாகக் கூறியபோது மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறினார்: "நான் அவருடன் உடன்படவில்லை, ஆனால் வெளிப்படையாக எனது நம்பிக்கையை பெரிய அளவில் அது உடைத்தது, மான்செஸ்டர் சிட்டி அணியில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதையும் அது வெளிக்காட்டியது." என்றார்.

கடந்த திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிலிப்ஸின் எடையைப் பற்றி பகிரங்கமாக பேசியதற்காக வருத்தப்படுகிறீர்களா என்று கார்டியோலாவிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் "ஆம், என்னை மன்னிக்கவும்." என்று கூறினார்.

"எட்டு வருடங்களுக்கு ஒரு முறை மன்னிப்பு கேட்டால் தவறில்லை. நான் மிகவும் வருந்துகிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிக்கவும்." என்றார் பெப் கார்டியோலா.

எடையைப் பற்றி பகிரங்கமாக பேசும் முன் கார்டியோலா, பிலிப்ஸுடன் பேசி இருக்க வேண்டும் என இப்போது கருதுவதாக கூறினார். "நான் ஒருபோதும், இதற்கு முன் நான் இதைப் பற்றி பேசவில்லை. அந்த விஷயத்தில் நான் வீரர்களுடன் பேசவில்லை." என்றார்.

மேலும், இதுபற்றி கார்டியோலா பேசுகையில்: "எனக்கு இது வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகள் வெளிப்பட்டு விடுகின்றன. அது நடக்கும், அது உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த (சம்பவம்) மறந்து விட்டது. அது நடந்தது, அவர்கள் பேசினார்கள் என்று நினைக்கிறேன், அவ்வளவுதான்." என்றார்.

Story first published: Tuesday, February 20, 2024, 18:02 [IST]
Other articles published on Feb 20, 2024
English summary
City boss Pep Guardiola apologises to Kalvin Phillips for ‘overweight’ comment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+